பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311 பொருட்கு இன்றியமையாதனவற்றையெல்லாம் கொணர்ந்து பொருந்த உரைப்பது உரையாகும்.அது அந்நூற் பொருளுக்கு மாறுபட்டவர் கூறும் வினாவும், அதனை மறுத்துக் கூறும் மாற்றமும் உடையதாகித் திரிபுப் பொருளையும் ஐயப் பொருளையும் நீக்கித் தனது நூலானும் தன் நூற்பொருள் முடிந்ததிற்கும் ஒத்த நூலானது உண்மைப் பொருளைக் -ாட்டிப் பொருள் துணிபு தர நிற்பதாய் அமைதல் வேண்டும். கருத்துக்களை, சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் தன்னு லானும் முடிந்தநூ லானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென வொருபொருள் ஒற்றுமை கொளிஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் _றும் மரபியல் நூற்பாக்கள் (105-106) உணர்த்துகின்றன. யாப்பருங்கல விருத்தியாசிரியர் கூறுவது சூத்திரப் பொருள் உரைக்கின்றுழிப் பலதிறத்தானும் _பைப்ப, என்னை? முத்திறத் தானும் மூவிரு விகற்பினும் பத்துவிதத் தானும் பதின்முன்று திறத்தானும் எழுவகை யானும் இரண்டுகூற் றானும் வழுவுநனி நீங்க மாண்பொடும் மதத்தொடும் யாப்புறுத் துரைப்பது சூத்திர உரையே _பது ஆகலின், அவற்றுள் முத்திறமானவன:- பொழிப்பு, அகலம், நுட்பம் என இவையாம், மூவிரு விகற்பமாவன:ாடுத்துக்காட்டல், பதம் காட்டல், பதம் விரித்தல், பதப் பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல் என இவையாம், பதிண்மூன்று திறமாவன:- சூத்திரம், தோன்றுதல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல், விசேட_ம்காட்டல், உதாரணம் காட்டல், ஆசிரிய வசனம் _ல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல்,