பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் என இவையாம். எழுவகையாவன:- பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், பதப்பொருள் உரைத்தல், ஏற்புழிக்கோடல், எண்ணல் என இவையாம். இரண்டு கூற்றாவன:- தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்துரைத்தல் என இவையாம். வழுவாவன:- குன்றக் கூறல் முதலிய பத்தாம் மாண்பாவன:- சுருங்கச் சொல்லல் முதலிய பத்தாம். எழுவகை ஆசிரிய மதமாவன:- உடன்படல் முதலிய 6J (Լք இவ்வகையே புகுந்தன பரப்பி உரைப்பான் புகில் இகந்துபட்ட உரையிற்றும் அதனால் எடுத்துக்கொள்ளப் பட்ட பொருளவற்றுள் யாதானும் ஒருவகையாற் கேட்போர் உணர்வு புலன் கொள்ளுமாற்றால் எடுத்துக்கொண்ட சூத்திரப்பொருள் உரைக்க வேண்டும் என்பது ஈண்டுத் துணிபு. இளம்பூரணர் தொல்காப்பிய முகப்பில் (சிறப்புப் பாயிர உரையுள்) கூறுவன: சூத்திரத்திற்கு உரை கூறுதல் நான்கு வகை பொழிப்பே அகலம் நுட்பம் எச்சமெனப் பழிப்பில் சூத்திரம் பன்னல் நான்கே அவற்றுள் பாடம் கண்ணழிவு உதாரணம் என்றிவை நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே தன் னுன் மருங்கினும் பிறநூன் மருங்கினும் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம் பன்னிய அகலம் என்மனார் புலவர் ஏதுவின் ஆங்கவை துடைத்தல் நுட்பம் துடைத்துக் கொள் பொருளை எச்சம் என்ப படைப்பவன் அல்லது ஆக்கியோன் யார் யார்