பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

417 அகத்தினைச் சமுதாயத்தில் வாயில்கள் அகத்திணைச் சமுதாயத்தில் அகவொழுக்கத்தை மேற் கொள்ளும் தலைவன் தலைவி என்னும் இருவருக்கும் உதவுபவராக இருப்பவரைத் தொல்காப்பியனார் வாயில்கள் என்பர். | இவர் இன்னார் என்பதை, "தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாட்டி இளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பில் வாயில்கள் என்ப" என்னும் நூற்பாவால் தொகுத்துக் கூறுகிறார். இவ்வாயில் களில் அறிவர் முதலான மிக உயர்ந்தவரும் தோழி முதலான ஒத்தவரும் பாணன் முதலான தாழ்ந்தவரும் இருத்தலின் இவ்வாயில்களைப் பணியாளர் என்னும் சொல்லால் வழங்குதல் கூடாது. தலைவியும் தலைவனும் நன்கு வாழ்வதற்கு வாயிலாக இருத்தலால் வாயில்கள் என்ற சொல்லால் வழங்குதலே தக்கதாம். இங்கு குறிப்பிட்ட எல்லா வாயில்களும் தலைவன் தலைவி என்னும் இருவர்தம் மகிழ்ச்சிப் பொருளினையே நிகழ்த்துதற்குரிய என்று கருத்தினை "எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப" என்பர். இவ்வாயில்களாவார் தலைவனிடத்தே சென்று தலைவியைப் பற்றிப் பேசுவராயின் தலைவியின் கற்பு, காமம், நல்லொழுக்கம், பொறுமை, நிறை, விருந்து புறந்தருதல், சுற்றம் ஓம்பல் முதலான (கற்பியல் - 11) நற்பண்புகளையே கூறுதல் வேண்டும் என்பர். மேலும் அவர் குறிப்புச் சொல் வெளிப்படைச் சொல் என்னும் இரண்டில் பொருள் புலப்பாடு கருதி வெளிப்படைச் சொல்லினையே கூறல் வேண்டும் என்பர். "வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல் தாவின் றுரிய தத்தம் கூற்றே".