பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 புறப்பொருட் சமுதாயம் தொல்காப்பியனார் அகப்பொருளையும் புறப் பொருளையும் இயைபில்லாத இரண்டு திணைகளாகக் கூறாமல் புறத்திணைகளை அகத்திணைகளோடு இயைபு படுத்தியே கூறியுள்ளார். அதனால் அகத்திணை இலக்கணங் களை அரில்தப உணர்ந்தோர்க்குப் புறத்திணை இலக்கணம், கூறுபாடு தோன்றக் கூறப்படுகிறது. அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின் என்று புறத்திணை இலக்கணத்தைக் கூறத் தொடங்குகிறார். புறத்திணையில் கூறப்படும் பொருள்கள் போரும், வெற்றியும், பலவகை நிலையாமையும், பாடப்படுபவனது ஒழுகலாறும் என நான்காகும். அவற்றுள் தொல்காப்பியனார் கூறும் போர்ச்சமுதாய இயலைப் பார்ப்போம். புறத்திணையில் போர்ச்சமுதாய இயல் உலகத்தில் நிகழும் எல்லாப் போர்களையும் போர்க்கு முன்னோடியான செயல் என்றும், பகைவர்தம் மண்ணைக் கொள்ளக் கருதிய போரென்றும், பகைவர்தம் அரனோடு கூடிய தலைநகரைப் பற்றி அவரை அழிக்கும் போரென்றும், இவைகளன்றி இரண்டு மன்னர்கள் தத்தம் ஆற்றலை நிலை நாட்டக் கருதிச் செய்யும் போரென்றும் நான்கு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இவற்றை முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை எனப் பெயரிட்டுத் தொல்காப்பிய னார் கூறுகிறார். அவர் இந்நான்கினையும், அரசர்க் குரியதாகவே கூறுகிறார். பன்னிரு படலம் என்னும் பொருளிலக்கண நூல் வெட்சியை அரசர்க்குரியதாகவும் மற்றவர்க்குரியதாகவும் கூறுகிறது. ஒரு பெரிய செயலின்னப் பல பகுப்பாகப் பிரித்துக் கொண்டு, அப்பகுப்பிற்கெல்லாம் தனித்தனிப் பெயர் வைத்து வழங்கும் வழக்கத்தை அகத்திணை இயலிலும் புறத்திணை இயலிலும் காண்கிறோம். அந்த முறையில் வெட்சித்திணை