பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 முதலிய திணைகளையெல்லாம் பலப்பலப் பகுப்பாகப் பிரித்துக் கொண்டு அவற்றிற்கெல்லாம் பெயர் வைத்துத் தொல்காப்பியனார் கூறுகின்றார். வெட்சி என்னும் புறத்தினை குறிஞ்சி என்னும் அகத் திணைக்குப் புறனாகும். அது வேந்தனாலே விடப்பட்ட முனையிடத்துள்ள வீரர் பகைவர்.நாட்டார் புக்கு அவர்தம் ஆக்களைக் கொண்டு வந்து ஒம்புதலாகும். அது படையியங்கரவம் முதலான பதினான்கு துறைகளையுடையது என்பர். வெட்சித்திணையின் பின் நிகழ்வது வஞ்சி முதலிய போராதலால் அதற்கு உறுதி பயத்தற்காக மறவர்தம் குடியையெல்லாம் திரட்டி அவர்தம் ஆற்றலையெல்லாம் ஆராய்ந்து பாராட்டும் குடிநிலை என்ற துறையும், கொற்றம் தரும் கொற்றவையை வழிபட்டு இனி நடக்கும் போரில் கொற்றம் வேண்டும் கொற்றவை என்ற துறையும் அடுத்துக் கூறப்படுகின்றது. இவற்றின் பின் முல்லையின் புறனாகிய வஞ்சித்தினை பகைவர்தம் மண்ணினைக் கொள்ளக் கருதி நிகழுமென்றும், இதன்பின் மருதத்தும் புறனாகிய உழிஞைத் திணை பகை மன்னர்தம் அரணினை முற்றுகையிடலும் பற்றுதலும் ான்னும் இரண்டு வகையில் நிகழுமென்றும், இதன்பின் நெய்தற்குப் புறனாகிய தும்பைத்தினை தம் மைந்தினை நிலைநாட்டக் கருதி நிகழுமென்றும் கூறுவர்.இத்திணைகளில் கூறப்பட்டுள்ள துறைகளில் வெட்சியிற் கூறப்பட்டுள்ள ஊர்கொலையும், வஞ்சியிற் கூறப்பட்டுள்ள எரிபந்தெடுத்தல் என்னும் துறையும் போரினால் பகைவர் நாட்டுப் பொது மக்கட்கு ஏற்படும் துன்பத்தை எடுத்துக் காட்டும். நல்ல நாள் பார்த்துப் போர் தொடங்கும் முறையைக் குடைநாட்கோள் வாள்நாட்கோள் என்னும் துறைகளால் அறிந்து கொள்கின்றோம். புறத்திணையில் வாகைச் சமுதாய இயல் புறத்திணையியலில் வேந்தர்க்குரிய போர்வகையைக் கூறிய வெட்சி வஞ்சி, உழிஞை, தும்பை என்னும் இவற்றின்