பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 பின் அப்போர்களில் அம்மன்னர்க்கு உளதாகிய வெற்றிகளையே கூறுதல் வேண்டும். புறப்பொருள் வெண்பாமாலையும், "இண்லபுனை வாகைசூடி இகன்மலைந்து அலைகடற் றானை,அரசட் டார்ந்தன்று" என அரசனை அட்டு ஆரவாரம் செய்தலை வாகை எனக் கூறும். ஆனால் தொல்காப்பியனார் அவ்வாறு கூறவில்லை நாட்டில் வாழும் எல்லா மக்களும் தம்தம் தொழிற் கூறுபாட்டில் வெற்றி காண்பதனையே அவர் வாகை என்று கூறுகிறார். 'வாகை தானே பாலையது புறனே" "தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப" என்பது அவர் நூற்பா. வாகை என்பது அகக்காழ் உடைய உறுதியான மரவகையுள் ஒன்று அதன் பூவைச்சூடி வெற்றி கொண்டாடுவர். வாகை என்பது வெற்றிக்கே ஒரு பெயரென்று திவாகர நிகண்டு கூறுகிறது. இவ்வாகை பாலைக்குப் புறனாகக் கூறப்பட்டுள்ளது. வாகைக்கு முதலான பாலையின் சிறப்பு நடுவுநிலைத்திணை என்று சிறப்பித்தோதப் பெறுவது அகத்திணையுள் பாலைத்திணை ஆகும். தொல்காப்பியனார் அகத்திணை இயலில் பாலையைப் பற்றிய செய்திகளையே மிகுதியாகக் கூறுகின்றார். இப்பாலைத்திணை ஒர் யாண்டில் பாதிக்காலத்தைத் தனக்கு உரியதாகப் பெற்றிருக்கிறது. பின்பனிக் காலத் தொடக்கமாகிய மாசித் திங்களிலிருந்து முதுவேனிற் காலத்தின் இறுதியாகிய ஆடித் திங்கள் இறுதி யாக ஆறு திங்களும் பாலைக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆறு திங்களில் காடிடையிட்டும் நாடிடையிட்டும் பிரிந்து வினை செய்து பொருளிட்டிக் கார்காலத் தொடக் கத்தே தங்கள் வீட்டிற்கு வந்து தங்கி முன்பனிக் காலத் திறுதியாகிய தைத்திங்கள் வரை (ஆறு திங்கள்) தங்கள்