பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421 தலைவியுடன் கூடி வாழ்வர். இது தொல்காப்பியனார் கூறும் பொதுவான விதியாகும். இதனைக் கருதிக் கொண்டே விக்கிரமாதித்தன் என்னும் அரசன் காடு ஆறு திங்கள் வீடு ஆறு திங்கள் இருந்ததாகக் கதை எழுதினர் போலும். இவ்வாறு நாட்டு மக்களெல்லாம் பிரிந்து தொழில் செய்வதற்குரிய பாலைத் திணையின் புறமாகத் தொல் காப்பியனார் வாகைத்திணையைக் கூறியுள்ளார்.அவர் வாகைத் திணைக்குப் பொருள் கூறுமிடத்து அரசர் வெட்சி முதலிய திணையை நிகழ்த்தி அவற்றாற் பெற்ற வெற்றியே வாகைத்திணை என்று கூறாமல் நாட்டில் உள்ள எல்லா மக்களும் தத்தம் தொழிற் கூற்றில் மிகுதிப்படுதலாகிய வெற்றியையே வாகைத்தினை என்பர். எனவே இவ்வாறு கூறப்பெறும் வாகைத்தினையும் எல்லா மக்களுடைய நிலையாமைகளைக் கூறும் பெருந் தினைப் புறனாகிய காஞ்சியும், புலவன் நாட்டு மக்களைக் குறித்து அவர்தம் பலவகைச் செயலைப் பாடும் கைக்கிளைப் புறனாகிய பாடாண் திணையும் நாட்டு மக்கள் அனைவரை யும் நோக்கி எழுந்தனவாகும். வாகைத்தினைச் சமுதாயம் தொல்காப்பியனார் வாகைத்திணைக்குரிய மக்களை அறுதொழில் செய்யும் பார்ப்பனர், ஐந்து தொழில் செய்யும் அரசர், ஆறு தொழில் செய்யும் வணிகர், வேளாளர், குற்றமில்லாத செயல்களை முக்காலமும் முறையுடன் செய்து வரும் அறிவர், எட்டுவகைத் தவத் தொழில் புரியும் தாபதர், பலவகையான தொழில் முறைகளை அறிந்து அவற்றிற் பொருட் பொருநர் என ஏழுவகையாகக் கூறியுள்ளார். அகத்தினைச் சமுதாயத்தில் அகவொழுக்கத்திற் குரியவராக ஆயர் வேட்டுவர் முதலான திணைமக்களைக் கூறிய தொல்காப்பியனார்,அகத்திணையுடன் இயைபுடைய புறத்திணையைக் கூறுமிடத்து, ஆயர் வேட்டுவர் முதலானவரைச் சிறிதும் குறிப்பிடாது, புறத்தினைத்