பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 தொழிலுக்குரியவராகப் பார்ப்பனர், அரசர், வணிகர் முதலிய ஏழு பிரிவான மக்களையே கூறுதலை, அறிஞர் உலகம் சிந்திக்க வேண்டும். வாகை தொழில் மேலதாதலின் அறுவகை, ஐவகை, இருமூன்று வகை முதலியனவெல்லாம் தொழிலையே குறிப்பனவாகும். வாகைத் திணைக்குரிய மக்களுள் அறிவரும் தாபதரும் உலகியல் நெறிக்கு அப்பாற் பட்ட ஒழுக்கமுடையவராவர். புறத்திணைச் சமுதாயத்தில் வேளாளர் பார்ப்பனரையும் அரசரையும் வேறுபடுத்திக் கூறிய தொல்காப்பியனார் வணிகரையும் வேளாளரையும் 'இருமூன்று மரபின் ஏனோர்' என்று ஒன்றுபடுத்தியே கூறுகிறார். இவ்வாகைத் திணைத் துறைகளைக் கூறும் மற்றொரு நூற்பாவில், "பகட்டி ளுறும் ஆவி னாறும் துகள்தடி சிறப்பின் சான்றோர் பக்கமும்" என்று வேளாளரையும் வணிகரையும் சான்றோர் என்று ஒன்றுபடுத்தியே கூறுகிறார். இப்பகுதிக்கு உரை வரைந்த இளம்பூரணர் "பகட்டால் (எருது) புரைதீர்ந்தார் வேளாளர். ஆனால் குற்றம் தீர்ந்தார் வணிகர்" என்பர். தொல்காப்பியனார் அடியோர் வினைவலர் என்று பணிமக்கள் சமுதாயத்தைக் குறிப்பிட்டு விட்டு, அந்தணர் முதலான நால்வரையும் ஏவல் மரபின் ஏனோர் (பிறரை ஏவிக்கொள்ளும் மரபின் ஏனோர்) என்று குறிப்ப தால், வேளாளருக்கு மற்ற மூவருக்கும் பணி செய்யும் தொழில் உண்டு என்று கூறுதல் ஆரியச் சார்பால் நிகழ்ந்த தாகும். புறப்பொருளில் காஞ்சி புறப்பொருள் வெண்பாமாலை , மண் கருதி வஞ்சி சூடி வந்த மன்னனுடன் மனை காத்தலுக்குரியவன் காஞ்சி என்னும் மலர்சூடிப் போர் புரிவதனைக் காஞ்சி என்றும், வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே என்ற நூற்பாவைக் காண்க. இது பன்னிரு படல நெறி, இந்நெறிக்கு முற்றிலும்