பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 மாறுபட்ட தொல்காப்பியம் பல நெறியால் உலகில் உள்ள நிலையாமையைக் கூறுதலே பெருந்திணைப் புறனாகிய காஞ்சி என்று கூறும் உண்மைப் பொருள் உணர்வார்க்கு நிலையாமை உணர்ச்சி உறுதி பயக்குமாதலால் பாங்கரும் சிறப்பினை உடையது என்பர். இது இரண்டு பகுப்பாக ஒதப்பட்டுள்ளது. புறப்பொருளில் பாடாண் கைக்கிளை என்பது அகத்திணை இயலில் முதற்கண் 'கைக்கிளை முதலா என்று முதலாவதாக எடுத்தோதப் பட்டுள்ள்து. அக்கைக்கிளையின் புறனாகிய பாடாண் புறத்திணை இயலில் இறுதியாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வியலில் தெய்வத்தையும் தெய்வத்தை ஒத்தாரையும் மக்களையும் பல்வகை நெறியால் பாடும் முறை கூறப்பட்டுள்ளது. முடிவுரை இங்ங்னம் தொல்காப்பியனார் அகச்சமுதாய இயலையும் புறச்சமுதாய இயலையும் கூறிச் செல்கின்றார். இவ்வியல்புகளில் மூவகைச் காலத்திலும் ஒத்து நடக்கும் நல்ல சமுதாய இயல்புகளை அறிந்து நடந்து உலகம் நன்னெறிப்படுவதாகுக. |