பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி பாழைநெகிழ்ந்து பாவை விளக்கிற் பரூஉச் சுடரழல இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர வருவி இன்பல் இமிழிசை யோர்ப்பனன் இடந்தோள் - முல்லை, 80-88 எனத் தலைமகள் தலைமகனைப் பிரிந்து எழுநிலை மாடத்தில் தனித்து இருந்தமையை பிரிவிடை ஆற்றாது வருந்துகின்றமையை உணர்த்துகின்றார்.ஆசிரியர், பேராசிரியர் டாக்டர். மு. வ. அவர்கள் முல்லைக்கு விளக்கம் கூறுகையில் 'கற்பு எனப் பொருள் கூறுகின்றார். அதாவது தலைமகன் தலைமகள் இருவரும் சொற்றிறம்பாமல் நடத்தலே கற்பு - முல்லை எனக் கூறுகின்றார். அவர். இதற்கேற்பவே தலைமகள் தலைமகன் பிரிந்து சென்ற போது அவன் பிரிவை ஆற்றியிருப்பதாகக் கூறிய சொல்லைத் திறம்பாமல் கடைப்பிடிப்பதை ஆசிரியர் நப்பூதனார் நீடு நினைந்து தேற்றியும் என்ற தொடர்வழிப் புலப்படுத்துகின்றார். தலைமகனும் தலைமகளைப் போன்றே சொற்றிறம்பாமல் கற்புடன் ஒழுகுவதைக் கார்காலத்தில் விரைந்து திரும்புகின்ற செயலின் மூலம் விளக்குகின்றார். இவ்வாறாக ஆசிரியர் நப்பூதனார் முல்லைத்திணை ஒழுக்கத்தைப் பாடலில் முதற் பகுதியிலும் இறுதிப் பகுதியிலும் அமைத்துக் காட்டுகின்றார். தலைமகள் மீளல் விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருஇவ் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவளி காலத்தில் வருதும் என மொழிந்து சென்ற தலைமகன் வினைமுற்றி மீண்டு வருகின்றான். வேண்டுபுலங் கவர்ந்த ஈண்டுபெருந் தானை யோடு விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு வயிரும் வளையும் ஆர்ப்பவும் அயிரவும், செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை மங்கை யவிழத் தோடார் தோன்றிக் குருதி பூப்பக் கானம் நந்திய செந்நிலப் பெருவழி