பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443 வானம் வாய்த்த வாங்கதிர் வாகின் திரிமருப் பிரலையொடு மடமானு கள எதிர்செல் வெல்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடு பின்னாகும்படி வருகின்றான் தலைமகன். தலைமகளின் வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவின் குளம்படி ஓசை யானது அரசிருந்து மணிக்கும் முரசுமுழங்கு பாசறையின் இன்துயில் வதியுநனைக் காணாது இடஞ்சிறந் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரும் மாத்திரள் அருவியின் இன்பல் இமிழிசை ஒர்ப்பனன் இடந் தோளாய தலைமகளின் அம்செவி நிறைய ஆவின என்று முடிக்கின்றார் ஆசிரியர். இதனால் தலைமகனும் சொன்ன சொல் தவறாமல் இருகின்ற பான்மையை உணர்த்தி நிற்கின்றார். தலைமகன் மீண்டும் வருகின்ற நிலையைக் கூறாமல் விடுத்திருந்தால் இம்முல்லைப்பாட்டு முழுமை பெற்றதாகாது. தலைமகனும் தன் பண்பில் குறைந்தவனாயிருப்பான். இவற்றைத் தவிர்க்கவே ஆசிரியர் நப்பூதனார் தலைமகன் மீண்டு வருகின்ற காட்சியினையும் அமைக்கின்றார். இறுவாய் இவ்வாறாக முல்லைப்பாட்டு ஆசிரியர் நப்பூதனார் பாடலின் தொடக்கத்தில் கடவீர் முகந்த கமஞ்சூல் எழிலி குடமலை யாகத்துக் கொள்ளப்பு இறைக்கும் காலத்தில் திரும்பி வருவதாகக் குறிசெய்து பிரியத் தலைமகள் அவன் பிரிவை ஆற்றாது வருந்துகின்றமையைக் கூறிப் பின்னர் அவள் கூறிச் சென்றபடி தன் கற்பு ஒழுக்கத்திற்கேற்றபடி இல்லிருந்து ஆற்றுகின்றமையைப் பின் கூறுகின்றார். இடைப்பகுதியில் தலைமகன் தலைமகளைப் பிரிந்து பாசறை வீட்டில் இருக்கின்றமையைக் கூறுகின்றார். இவ்வாறு தலைமகன் தலைமகள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து தத்தமக்குரிய இடத்தில் சொற்றிறம்பாமல் இருப்பதாகக் கூறும் இருத்தல் நிமித்தத்தை விளக்கி நிற்பதால் வஞ்சிதானே முல்லையது புறனே என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு இயைய முல்லைப்பாட்டு அமைந்துள்ளது எனத் துணியலாம்.