பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய இலக்கணத்தின்படி பாடப் பெற்ற சங்கச் செய்யுட்களின் திணை துறையமைப்பிற்கும் பொருத்தமுடையதாக அமைந்துள்ளது. வெட்சி முதலிய அறுவகைப் புறத்திணைகளையும் நிலைக்களமாகக் கொண்டு பாடப் பெறும் பாடாண் பாட்டுக்களை முறையே வெட்சிப் பாடாண், வஞ்சிப் பாடாண், உழிஞைப் பாடாண், தும்பைப் பாடாண், வாகைப் பாடாண், காஞ்சிப் பாடாண் என வழங்குதல் பொருத்தமுடையதாகும்.

மூலநூலில் ஆசிரியர் சுட்டிய தொகைக்கு அந்நூலிலேயே வகை கூறப்பெற்றிருத்தல் வேண்டும் என எண்ணிய பாரதியார் அக்கருத்திற்கேற்பப் புதியவுரை கண்ட இடங்களும் உண்டு.

     “இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றனும்
      உரியதாகும் என்மனார் புலவர்”                         
                                               (தொல்-அகத்-11)

என வரும் அகத்திணையியற் சூத்திரத்தில் இருவகைப்பிரிவு' என்னுந்தொகை, இதற்குமுன்னுள்ள இருசூத்திரங்களிலும் குறிக்கப் பெற்ற முதுவேனிற் பிரிவும் பின் பனிப்பிரிவும் ஆகிய இருவகையினையே சுட்டி நின்றது என மிகவும் நுண்னிதின் ஆராய்ந்து உரை வரைந்துள்ளார். முதுவேனிற் பருவத்திற் பிரிந்து சென்றதலைவர் கார்ப்பருவத்தில் மீண்டு வந்து கூடலும், பின் பனிப்பருவத்திற் பிரிந்த தலைவர் இளவேனிற் பருவத்தில் மீண்டுவந்து கூடலும் மரபு என்பதனை இச்சூத்திரம் சுட்டுவதாக நுண்ணிதின் உணர்ந்து வெளியிட்டமையும் இப்பிரிவுகட்குச் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுத்தந்து விளக்கியுள்ளமையும் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாம். எனினும் நூலாசிரியன் கூறிய தொகைகட்கெல்லாம் அந்நூலிலேயே வகை சொல்லப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதனை எல்லாவிடங்களிலும் நியதியாக வற்புறுத்தல் பொருத்தமாகாது. இருவகைப்பிரிவு என்பது உலக வழக்கில் நிலத்தின் வழிப்பிரிவும் கடல்வழிப் பிரிவும் என்னும் இருவகையினையும் சுட்டி வழங்குவதாகும். இவ்விரண்டினையும் முறையே காலிற் பிரிவு எனவும் களத்திற் பிரிவு எனவும் வழங்குதல் மரபு கால் - வட்டை, வண்டி, கலம்

மரக்கலம், இவ்வுண்மை,

21

21