பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


'கலத்தினுங் காலினுந் தருவனர் ஈட்ட'

(சிலப்-மனையறம்படுத்த காதை 7) எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் நன்கு புலனாகும். இத் தொடர்க்கு விளக்கம் கூறக்கருதிய அடியார்க்கு நல்லார், "இரு வகைப்பிரிவும் நிலைபெறத் தோன்றினும், உரியதாகும் என் மனார் புலவர்” (தொல் அகத்-11) என்பதனாற் கலத்தினும் காலினும் என்றார்” எனக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத்தக்க தாகும்.

'பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான்.கென்ய’ (தொல்- மெய்ப்- 1)

என்பதும்,

'நாலிரண்டாகும் பாலுமாருண்டே' (மேற்படி 2) "ன்பதும் மெய்ப்பாட்டியலின் தொடகத்திலுள்ள சூத்திரங்களாகும். இவ்விரண்டு சூத்திரங்களும் நாடக நூலார் வேண்டுமாற்றால் மெய்ப்பாட்டின் வகையினை விரித்துக் கூறுவனவாக இளம் பூரணரும் பேராசிரியரும் உரை வரைந்தனர். பண்ணை என்னும் சொல் விளையாட்டு என்னும் பொருளுடையது என்பது,

"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு'

(தொல்-உரியியல் 23)

எனவரும் தொல்காப்பிய நூற்பாவால் இனிது விளங்கும். 'விளை யாட்டாயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையுங் குறித்து அதன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று சொல்லுவர் ஆசிரியர்' என இவ்வியல் முதற்சூத்திரத்திற்கு உரை வரைந்த இளம்பூரணர், 'முப்பத்திரண்டாவன நகை முதலான வற்றுக்கு ஏதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டு ஈறாக முன் பின்) எடுத்து ஒதப்படுகின்றன. அவற்றைக் குறித்த புறன் ஆவன (நகை முதலிய எண்வகைச் சுவையும் (அவ் எண் வகைச்சுவை) குறிப்பும்' என விளக்கம் தந்தார்.

நாடகத் தமிழ் நூலாம் மேய்ப்பாடு பற்றி வகுத்துக் கொண்ட கூறுபாட்டின் விரிவினையும் வகையினையும் எடுத்துரைப்பதி இச்சூத்திரம் எனக்கொண்ட பேராசிரியர், "முடியுடைவேந்தரும்

22