பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கங். బ్రిడ్జి; ఫ్రో "உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை’ (புறம்.3) எனவும், 'ஒங்குதிரை வியன்பரப்பின்" (பத்துப். மதுரை 1) எனவும், 'நிலவுமணல் வியன்கானல்' (புறம் 17) எனவும் இவை ஆசிரியத்துள்ளும் வஞ்சியுள்ளும் வந்தவாறு. 'துரங்குதிரை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டே' எனவும், "ஏடுகொடி யாக வெழுதுகோ' (முத்தொள், 50) எனவும் இவை வெண்பாவினுட் கட்டளையடியல்லாதவழிச் சிறு பான்மை யான் வந்தன. மற்றிவையுங் கட்டளையடி யென்னாமோ வெனின் அற்றன்று; அது தளைவகை கொள்ளுந். துணை இன்னோசைத்தன்றென்பது, "அசையுஞ் சிரு மிசையொடு சேர்த்தி" (தொல். செய். 11) என்பதனானுணர்க. இப்பகுதி யறியாதார் அடியுறழ்ந்ததனாற் பயனென்னை யென்றிகழ்ப. (கச) ড়ি ওঁ ওঁ কয় কেf" : : இஃது இயலசையும் உரியசையும் மயங்கிச் சீராமாறு கூறுகின்றது. இ-ள். உரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர்’ (செய்-கங்) என்ற அதிகாரத்தான் அவ்வுரியசைமுன்னர் நிரையசைவரினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரியவுரிச்சீராம். எ-று. அவை நேர்புநிரை, நிரைபுநிரை. உ-ம். நீடுகொடி நானுத்தளை, உரறுபுலி விரவுகொடி எனவரும். செய்யுள் : 1. துரங்குதிரை' எனவும், ஏடுகொடி' எனவும் உரியசை முன் திரையசை புற்ற ஈரசைச்சீர்கள் வெண்பாவினுட் கட்டளையடியல்லாதவழிச் சிறுபான்மை வந்தன. இவை தளைவகை கொள்ளும் அளவுக்கு இன்னோசையுடையவல்லாமை பால் கட்டளையடியுட்பட்டு அடங்காவாயின. நீடுகொடி (நேர்புநிரை) என்பதனைப் பாதிரி (நேர்நிரை) என்னும் நிரையீற்றியற்சிரேபோலக் கொள்ளுங்கால் வெண்பாவின் செப்பலோசை சிதையாதவாறும் இவ்வாறன்றித் துரங்-குதி-ரை, ஏபடுகொ-டி எனவும் மூவசைச்சீர்களாகக் கொண்டு பிற்கால யாப்பிலக்கணவாசிரியர் சொல்லமைதி கெடப் பகுத்துரைத்தல் பொருந்தாமையம் கண்டு கொள்க.