பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் சீரேயாமென வழுவமைத்தவாறு.1 குற்றுகரங் குறிலோடுகூடி நிரையாவதனைக் குறிலினையெனக் குற்றெழுத்தாக்கி ஒதினான். அதுபோல ஒற்றளபெடையும் ஒரு மாத்திரையாவதனைக் குற் றெழுத்தென் றோ தானோவெனின், அங்ங்னம் ஒதின் அவ்வள பெடை குறிலாகித் தன்முன் வந்த குறிலோடும் பின்வந்த குறிலோடும் நெடிலோடுங் கூடி நிரையசையாகுவதாவான் செல்லுமென மறுக்க 2 மற்று, 'அரங்ங்கம்' என்புழிப் புவிசெல்வாயென மூவசைச்சீருமாமாகவின் இதனை மூவசைச்சீரின் பின் வைக்கவெனின், அற்றன்று; அவ்விரண்டற்கும் பொதுவகையாக இடைவைத்தானென்பது. அல்லது உம் ஈரசைச் சீராதலே பெரும்பான்மையாதலின் ஈண்டு ஈரசைச் சீர்ப்பின் வைத்தான் இவ்விரண்டளபெடையினையுமென்பது. மற்று, வழக்கினுள் வரும் இயற்கையளபெடையன்றே அசைநிலையாவன, ஒற்றளபெடை வழக்கினுள் வருமோவெனின், அவையுஞ் சிறுபான்மை வழக்கினுள் வருமென்பது, அவை, “சுள்ள்ளென்றது” புள்ள்ளென்றது' 'கள்ள்ளென்றது’ 'துண்ண்ணென்றது,' "திண்ண்ணென்றது’ என வரும். பிறவு மன்ன. இவை, செய்யுளகத்தல்லது பரவை வழக்கினுள் வாரா வென்பாரு முளர். அவரறியார் ; செய்யுட்குப் புலவர் செய்து 1. கண்ண் தண்ண்ணெனக் கண்டுங்கேட்டும், எனவரும் மலைபடுகடாத்து அடியுள் கண்ண்-தேமா எனச் சீர்நிலை யெய்திற்று. தண்ண்ணென-பாதிரி என அசைநிலை யெய்திற்று. பரவைவழக்கு-உலகவழக்கு செய்யுட்குப் புலவர்கள் செய்துகொண்ட அளபெடை பின்னர் அசைநிலையாதற்குக் காரணம் அவ்வளபெடை உலக வழக்கிலும் பயிலுதலேயாம். 2. குற்றுகரம் குறிலொடுங்கூடி நிரையாவதனைக் குறிலினையெனக்குற்றெழுத்தாக்கிக் கூறியவாறுபோன்று ஒற்றளபெடை ஒரு மாத்திரையாவதனைக் குற்றெழுத்தெனக் கூறின் அவ்வளபெடை குறிலெனப்பட்டுப் பின்வரும் குறிலோடும் நெடிலோடுங் கூடி நிரையசை யாகுமாதலால் அங்ங்னம் ஆகாமைப் பொருட்டு அதனைக்குற்றெழுத்தெனக் கூறிற்றிலர் ஆசிரியர். அரங்ங்கம் எனக் குறிலிணைக்கீழ்வந்த ஒற்றளபெடை புலிசெல்வாய், என மூவசைச் சீருமாம். ஆதலின் இவ்வளபெடையினை ஈரசைச்சீர்க்கும் மூவகை i க்கும் இடை வைத்தார் ஆசிரியர்.