பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கஎ வம்ங். இதுவும் ஓரசை சிதையாது நிற்கவும் அலகுபெறாதெனவே எழுத்தின்றன்மை எய்திற்று. இது வழக்கிற்குஞ் செய்யுட்கும் உறுப்பாய் நின்றன அளபெழுதலும், தோற்றிக் கொண்டன அளபெழுதலுமாம். சுள்ள்ளென்றது, புள்ள்ளென்றது, நள்ள்ளென்றது, கிண்ண்ணென்றது - இவை வழக்கிற்குஞ் செய்யுட்கு. முரிய, தோற்றினது, கண்ண்ணென முற்காட்டினாம். இருவகை யுகர மீறாய்க் கொங்ங்கு, குரங்ங்கு, மின்ன்னு, எஃஃகு என்பன உயிரளபெடையின் வருமெழுத்தோடு கூடிப் போரேறு, கடியாறென நிற்குமாறுபோலாது வண்டு வரகு என்னும் உரி. யசைப்பாற்படுதலின் உயிரளபெடையின் வேறாக2 வோதினார். இருவகை யுகரத்தோ டியையாதவழிக் 'கண்ண்டண்ண்ணென’ “கஃஃறென்னுங் கல்ல தரத்தம்’ எனத் தேமாவாக அலகுபெற்றன. இனி, 'நீட்டம் வேண்டின் (எழுத்-நூன்-கா) என்னுஞ் சூத்திரத்துட்காட்டிய 'செய்யுட்க ளோசை சிதையுங்கா வீரளபும் ஐயப்பா டின்றி யணையுமாம்-மைதிரொற் நின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமேல் ஒற்றளபுங் கொள்' என்னும் மாபுராணச் சூத்திரத்துள் மைதீரொற்று' என்றதனானே, சீர்வகையடி யோசைகெடின் ஒற்றில்லாத சொல்லிற்கோசை அவ்வொற்றை உண்டாக்கியுநிற்குமென்றும், குன்றுமேலோற்றளபுங் கொள்’ என்றதனானே அவ்வொற்றானும் ஒசை நிறையா. விடின் அங்ங்ணம் வருவித்த ஒற்றை அளபெடுத்துங் கொள்க வென்றுங் கூறிய விதியுங்கொள்க. 1. ஒரசை' என்பதனை ஓசை' எனத்திருத்துக. 2. பனாஅட்டு' என்றவழி உயிரளபெடை வருகின்ற எழுத்தோடு கூடிக் 'கடியாறு என்னுஞ் சீராயவாறுபோன்று 'கொங்ங்கு' , ' குரங்ங்கு' என ஒற்று அளபெழுந்தவழி அவ்வளபெடை வருகின்ற எழுத்தோடு கூடி முறையே போரேறு கடியாறு என்னும் சீராகவோ, அன்றி ஞாயிறு, வலியது என்னும் சீராகவோ ஆகாமல் வண்டு, வரகு என்னும் உரியசைப்பாற்படுதலின் ஒற்றளபெடையினை உயிரளபெடையின் வேறாக ஒதினார் ஆசிரியர்.