பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கஅ எாம்ரு (இ - 7 ) மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறோடு நான்கசையுங் கூட்டியுறழ, அறுபத்துநான்கு மூவசைச் சீராம். அவற்றுள் இயற்சீர் நான்கின்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுரிச்சீராம் என்றவாறு.1 உதாரணம் 'மாவாழ்கான், மாவருகான், புவிவாழ்கான், புவிவருகான்' என்பன. (கஅ) இது, நிறுத்த முறையானே ஈரசை கொண்டு சீரியைந் திறுவன உணர்த்தி இனி மூவசை கொண்டு முடிவன உணர்த் துவானெழுந்தான்; அவற்றுள் இது வெண்பாவுரிச்சீருணர்த்து (இ - ள்) மேனின்ற அதிகாரத்து இயலசையானாகிய இயற்சீரிறுதிக்கண் நேரசை பெறுவன நான்கும் வெண்பாவுரிச் சீராமென்று சொல்லுவர் புலவர் (எ - று). 'உரிச்சீர் வெண்பாவாகும்’, வெண்பா வுரிச்சீராகுமென மொழி மாற்றி யுரைக்க. உ - ம்: 1நேர்நேர்நேர் 2நிரைநேர்நேர் நேர்நிரைநேர் 4நிரை நிரைநேர் என வரும் இவற்றை, 1மாசெல்வாய் 2.புவிசெல்வாய் மோவருவாய் புலிவருவாய். எனவும், 1தேமாங்காய் 2.புளிமாங்காய் கூேவிளங்காய் கருவிளங்காய் எனவும் வேறுவே றுதாரணங் காட்டுப. பிறவும் அவ்வாறு வருவன அறிந்துகொள்க. அவற்றுக்குச் செய்யுள் : "காமன்கா ணென்று கருவூரார் பாராட்டத் தாமந்தாழ் கோதை தருவானை - யாமும் இருகுடங்கை யானெதிரே கூப்பித் தொழக்கண் டொருகுடங்கை யாயின கண்” (சிலப். மேற்) 1. இங்கு இயற்சீர் என்றது, நேர், நிரை என்னும் இயலசைகளால் ஆகிய நேர் நேர், நிரைநேர், நேர்நிரை, நிரைநிரை, யென்னும் ஈரசைச்சீர் தான்கினையும், இச்சூத்திரத்து வெண்பாவுரிச்சீர்' என்பது, உரிச்சீர் வெண்பா' என மொழிமாறிநின்றது.