பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உச . ఫ; it. "பாஅ லஞ்செவிப் பனைத்தாள் மாநிரை' (கவி-5) எனவும், 'உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையை” (கலி-38) எனவும், "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கவி.39) எனவுங் கலியடியுள் வந்தன. இயற்சீர் பத்துள்ளும் இவை யிரண்டினையுங் கலிக்கண் வாராவெனவே ஒழிந்த ஆசிரியத் துள்ளும் வெண்டாவுள்ளும் பத்தியற்சீரும் வேறுவேறு வந்து அடியுறழுமென்பது உம், இதற்காயின் எட்டியற்சீர் அடியுறழு மென்பது உங் கூறினானாம். எனவே ஆசிரியம், இயற்சீர்பத்தும் ஆசிரிய உரிச்சீரிரண்டுமெனப் பன்னிரண்டுசீர் பெறுவதா யிற்று. வெண்பாவும் இயற்சீர்பத்தும் வெண்சீர் நான்குமெனப் பதினான்குசீர் பெறுவதாயிற்று. கலிப்பாவடியின் இயற்சிரெட் டும் வெண்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீரிரண்டுமெனப் பதி னான்குசீர் பெறுவதாயிற்று. அசைச்சீருளாவன முன்னர்ச் (செய்யுள் உன்.) சொல்லுதும். இனி, வஞ்சிப்பாவிற்கும். - "வஞ்சி மருங்கி னெஞ்சிய உரிய' (தொல்-செய்-22) என முற்கூறியவாற்றான் ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்துநான்குமென எண்பதுசீருங் கட்டளையடியல்வழி உரியவென எய்துவித்ததாம்.? அவற்றுள் தேமா புளிமா வென்னும் இரண்டுசீரும் ஆகாத இடம் இனிச் சொல்லு கின்றான். (உரு) ঞ্চি ঞ্জ কে স্ট্রঞ্চক : இதுவும் கட்டளையடிக்கோர் சீர் வரையறை கூறுகின்றது. 1. ஆசிரியப்பா இயற்சீர்பத்தும் ஆசிரியவுரிச்சீர் இரண்டும் ஆகப் பன்னி ரண்டு சீர்களும், வெண்பா இயற்சீர்பத்தும் வெண்சீர்நான்கும் எனப் பதினான்கு சீர்களும், கலிப்பா துேமா புளிமா என்னும் இரண்டும் நீங்கலாக இயற்சீர் எட்டும் வெண்சீர் நான்கும், ஆசிரியவுரிச்சீர் இரண்டும் ஆகப் பதினான்கு சீர்களும் பெறும், 2. வஞ்சிப்பா கட்டளையடியல்வாதவழி வஞ்சி மருங்கினெஞ்சியவுரிய" (செய். 22) என முற்கூறியபடி ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்து நான்கும் ஆக எண்பது சீரும் பெறும் என்பதாம். அவற்றுள் முற்கூறிய தேமா புளிமா என்னும் இயற்சீரிரண்டும் வஞ்சிப்பாவின் தாங்கலோசைப்பட அடியின் முதற்கண் நில்லா என்பது அடுத்துவருஞ் சூத்திரத்தாற் கூறப்படும்.