பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உரு 守、子°巴芬 இது, வஞ்சிப்பாவினுள் வாரா இயற்சீர் கூறுகின்றது. (இன்.) வஞ்சி மருங்கினும்-மேற்கூறிய இயற்சீர் இரண்டும் வஞ்சிப்பாவினும்; இறுதி நில்லா- ஈற்றில் நிலைமைப் படா (எ-று) வஞ்சித்தளை மருங்கி னென்னாது வஞ்சி மருங்கினென வாளாது கூறினான், அது கட்டளையடிக்கல்லாமையின். வஞ்சிப் பாவினுட் சீர்வருங்கால் ஒழிந்த பாவிற்குப்போலச் சீரியைந்திறு தன் மாத்திரையன்றிச் சீர்தோறுந் தம்முள் வேறுபாடு தோன்றத் துரங்கப்படும். அவ்வாறு துரங்கலோசைப்பட நில்லா தேமா புளிமாவென்னும் இரண்டு சீருமென்றவாறாம். உம்மை இறந்தது தழி இயிற்று. இறுதிநில்லா வென்பது இறுதலோடு நில்லாவென்றவாறு. எனவே, துரங்கலோசைப்பட முதற்கண் வாராவென்றவாறாம். என்னை ? இருசீரினுள் வருஞ்சீரோடு தொடருங்கால் இறுதற்றொழில்பெறுவது நின்றசீராகலினென் பது இதனானே ஒழிந்த இயற்சீரில் துரங்கலோசைப்பட நிற்கு மென்றவாறாம் : "கொற்றக் கொடி யுயரிய' எனவுங், 'களிறுங் கதவெறிந்தன’’ எனவும் நேரீற்றியற் சீர் முதற்கண் தூங்காவாயின. ‘அகவல்யன் மலைவேலி நிலவுமணல் வியன்கானல்" (புறம்-17) என ஒழிந்த இயற்சீர் தூங்கினவென்பது. இவையுங் கட்டளை யல்லவென்பது அசையுஞ் சீரும்’ (தொல் செய்-11) என்பதனான் அறிக.2 இறுதிக்கண் விலக்காமையின், 'மண்டினிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்' (புறம்.2) என நேரீற்றியற்சீர் வந்தன. 1. தேம புளிமா என்னும் நேரீற்றியற் சீர் இரண்டும் வஞ்சிப்பாவில் அடி முதல்நின்ற சீரின்கண் துரங்கலோசைப்பட வாரா. எனவே நேரீற்றியற் சீரல்லாத ஒழிந்த இயற்சீரின் கண் தாங்கலோசைப்படவரும் என்பதாம். 2, இவையும் கட்டளையடியல்லாத சீர்வகையடிகளுக்கேயென்பது: 'அசையுஞ் சீரும் (செய். 1) என்பதனால் அறியப்படும்.