பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ. ள் ) வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கவியடியுள் நின்ற வழி அவ்வெண்சீருள் ஈற்று நின்ற சீரின் முதல்வந்த நேரசை1 மற்றை நிரைமுதல் வெண்சீர் வந்து முன்னைய இரண்டுங் கலித் தளையாய வாறுபோலக் கலித்தளையாம் (எ-று). மேனின்ற அதிகாரத்தால், “தளை வகை சிதையாத் தன்மைக்கண்' (28) என்பது, கூட்டியுரைக்க. எனவே, வெண்சீர்ப்பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததெனவும் நேர்வந்து தோன்றினும் அவ் வோசையே பயந்து ஒருநிகர்த்தா மென்பது உங் கூறி அவ்வா றாங்காலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்றாவதெனவுங் கூறினானாம். இது, 'மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனை முட்டின்றி முடித்தல்” (மரபு 110) என்னும் உத்திவகை. வெண்சீரிறுதி யென்பது ஏழாவதன் தொகை, என்னை? ஈறெனப்பட்டது சீராகலின். வெண்சீருள் ஈற்றுச்சீரெனவே வெண்சீர் பலவுந் தொடர்ந்து நிரைமுதல் வந்தவழியன்றி இறுதிச்சீரொன்றியது நிரையசையியற்றாகா தென்பதாம். இதனான் நிரைமுதல் வெண்சீர் வந்து நிரை தட்குங் கால் இயற்சீரடி முதற்கண் வருமென்பது உங் கூறப்பட்ட தாம். மற்று, ஈறென்றது ஈற்றுச்சீரினையாயின் அச்சீரினிடையும் இறுதியும் நின்ற அசையினை நிரையசையியற்றென்று கொள்வ னெனின், நின்றசீரின் ஈற்றசை வருஞ்சீரின் முதலசையோடு தட்பின் தளையாவதன்றி ஒன்றிடையிட்ட அசையுஞ்சீரும்பற்றித் தளைகொள்வா ரின்மையின் அது கடாவன் றென்பது.8 1. வெண் சீர் ஈற்று அசை என்பதற்கு, வெண்சீருள் ஈற்றுநின்ற சீரின் முதல்வந்த நேரசை' எனப்பொருள் கொண்டார் பேராசிரியர். 2. வெண்சீர்ஈறு என்புழி ஈறு' எனப்பட்டது. வெண்சீருள் ஈற்றுநின்ற சீரினை. எனவே வெண்சீர் பலவுந் தொடர்ந்துவந்து நிரைமுதல் வெண்சீராய்த் தளைக்கும்வழியல்லது இறுதிநின்ற வெண்சீரின் முதலிலுள்ள நேரசை நிரையசையின் இயற்றாகாது என்பது பெற்றாம். z» 3. வருஞ்சீரின் முதலசை நின்றசீரின் ஈற்றசையோடு தளைத்தலே தனை யாவதன்றி வருஞ்சீரின் இடையும் இறுதியும் நின்ற அசைபற்றித் தளைகொள்வாரின்மையின், ஈற்றுச்சீரின் இடையும் இறுதியும் நின்ற அசையினை நிரையசையியற் றென்று கொள்வனெனின்' என்பது வினாவாகாது என்பதாம்.