பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்- நூற்பா க. :) ārf r#Ꭶr á_ 'ஈரசைகொண்டு’ (செய், ம்க) என்பது முதலாக இத் துணையுஞ் சொல்லப்பட்டது ஒரசைச்சீர் நான்கு, ஈரசைச்சீர் பதினாறு, மூவசைச்சீர் அறுபத்துநான்கு, ஆகச்சீர் எண்பத்துநான்கில் ஓர் அசைச்சீர் நான்கெனவும் அது தளைவழங்கும்வழி இயற்சீரொக்கு மெனவும், ஈரசைச்சீர் பதினாறும் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பிலியற் சீர் ஆறும் எனப் பத்தாம் எனவும், ஆசிரியவுரிச்சீர் ஆறு எனவும், மூவசைச்சீர் அறுபத்து நான்கில் வெண்பாவுரிச்சீர் நான்கெனவும் ஏனைய வஞ்சிபுரிச்சீர் எனவும் கூறியவாறு.1 இது, வஞ்சியுரிச்சீர் ஆசிரிய அடியுண் மயங்குமாறுணர்த் தல் நுதலிற்று. (இ-ன்.) கட்டளையடியல்லாதவழி இன்சீரியைய வருகுவ தாயின்? வஞ்சியுரிச்சீர்களும் ஒரொருவழி ஆசிரியத்துள் வரப் பெறும் (எ- று). ஒருவழி யென்னாது ஒரொருவழியென்ற தென்னை யெனின் அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் பத்துச்சீரே வருமென்பது உம், அவை வருங்காலும் பயின்றுவாரா வென்பது உம் அறிவித்தற்கென்பது. அவை: மாசேர்சுரம், 2.புலிசேர்கரம், மோசெல்காடு, புலிசெல்காடு, மோசெல்கடறு, புேலிசெல்கடறு, போம்புசேர்வாய், போம்புவருவாய், 9களிறுசேர்வாய் கேளிறுவருவாய் என்பன. அவற்றுக்குச் செய்யுள் : 1'மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை” (யா. வி. ப 79) 2'குறிஞ்சியொடு கமழுங் குன்ற நாடன்” (யா. வி. ப. 80) 1. ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியல் யக-முதல் ய-முடியவுள்ள சூத்திரங்களிற் சீர்பற்றிக் கூறிய விதிகள் அனைத்தையும் தொகுத்துக்கூறும் முறையில் அமைந்தது இவ்வுரைப்பகுதியாகும். 2 . அந்நிலைமருங்கின் என்றது, மேலைச்சூத்திரத்தில் இன் சீர் இயையவருகு வதாகிய சீர்வகையினைச் சுட்டி நின்றது. எனவே கட்டளையடியல்லாதவழி என்பது பெற்றாம். 3. ஒருவழி யென்னாது ஒரொருவழி இயன்றதனால் அறுபது வஞ்சிச்சீருள்ளும், மாசேர்சுரம், புலிசேர்சுரம், மாசெல்காடு, புலிசெல்காடு, மாசெல்கடறு, புலிகெல்கடறு, பாம்புசேர்வாய், பாம்புவருவாய், களிறுசேர்வாய், களிறு வருவாய் என்னும் இப்பத்துச் சீருமே ஆசிரியத்துள் அருகிவரப் பெறும் என்பதாம். இதுகாறும் சீருணர்த்தப்பெற்றன.