பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச அ @一鱼一ā》 மென்று பதினேழெழுத்தடியான் வந்த வெண்பாவடியினைத் தாமுங் களைபவாகலானும் அது கூறி நிரம்பாதென்பது.1 மற்றென்னை தளைகொள்ளுமாறெனின், ஆசிரியத்துள் இயற் சீர் பத்தொன்பதும், ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்குமென இருபத்தேழாகி, ‘எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே-குன்றலு மிகுதலும் (தொல். செய், 43) இன்றி வரும். வெண்பாவினுள் ஆசிரியவுரிச்சீர் நான்கும், அசைச்சீர் நான்கும் ஒழித்து ஒழிந்தசீர் இருபத்து மூன்றும் வெண்சீர் நான்கினோடுந் தலைப்பெய்ய அவையும் அவ்வாறு இருபத் தேழாம். 1. இனி, ஆசிரியப்பாவினுள் கவித்தளை தட்குங்கால் அன்னோர் தளை கொள்ளும் முறையில் வெண்சீர் நிற்ப அதன் இறுதியில் நிரைமுதற்சீர் வருதல்வேண்டும். கட்டளையடியாசிரியப்பாவின்கண் வெண்சீர் வரும் எனத் தொல்காப்பியனார் கூறினாரல்லர். எனவே அங்குத் தளைவழுவுக்கு இடமில்லை, 'வெண்சீரிறுதிநிரையசையிற்றே (செய்-29) என்பதனால் ஞாயிறு என்னும் இயற்சீர் மாசெல்வாய்' என வெண்சீராக்கித் தளை கொள்ளலாம் எனக் கூறலாமெனின் வெண்சீரின் இயல்பினதாய் அங்ங்னம் கொள்ளின் வரும் குற்றம் "வெண்சீரிறுதிநிரையசையியற்றே" என்னும் அச்சூத்திரவுரையில் முன்னர்க் கூறப்பட்டது. எனவே இயற்சீரை வெண்சீராக்கி அமைதி கூறுதலும் நிரம்பாது. அதுவன்றியும் ஒரெழுத்து முதலிய நிலங்களில் ஒரோர்நிலத்து இரண்டு மூன்று என்ற அளவில் தளைவழுக் காட்டுதல் இயலுமாயினும் மூவகைப்பாக்களிலும் எழுபது வகையினவாகிய தளைவழுக்களைக் காட்டல் இயலாது. இனி ஏழெழுத்து முதல் பதினான்கெழுத்தளவும் எட்டுநிலங்களே வெண்பாவுக்குரிய என ஆசிரியர் தெளிவாக எடுத்துரைத்தாராகவும் அவர்கருத்துக்கு மாறாக இரண்டு நிலங்களையேற்றி வெள்ளைநிலம் பத்து எனக் கூறுதலும் பொருந்தாது. வெள்ளைநிலம் பத்தென்றலே தொல்காப்பினார் கருத்தாயின், "அளவடி மிகுதி யுளப்படத்தோன்றி, யிருநெடி லடியுங்கலியிற் குரிய (செய், 59) எனக்கலிப்பாவிற்கு எழுத்துக்களின் சிற்றெல்லையும் பேரெல்லையும் வரையறுத்தாற்போன்று, கவிப்பாவினுஞ் சிறப்புடையதாகிய வெண்பாவிற்கும் எட்டின் மேற்பட இரண்டு நிலனும் ஏற்றி வெண்பா பெறும் எழுத்துக்களின் பேரெல்லையினை வரையறுத். திருப்பர். அன்றியும் கலிப்பாவினுள் வெண்சீரொன்றினுங்கலியோசை பிறக்கும் எனக்கொண்டு பதினேழெழுத்தால் ஆகிய வெண்பாவடியினை வெண்பா அன்றென விலக்குவர் ஆசிரியர். எனவே தொல்காப்பியனார் காலத்திற்குப் பின் வந்தோர் வகுத்துரைக்கும் தளையமைப்பினை அடிப்படையாகக் கொண்டு எழுபது தளைவழுக் காட்டுதல் நிரம்பிய இலக்கணமாகாதென்பது பேராசிரியார் கருத்தாதல் இவ்வுரைப் பகுதிகளால் உய்த்துணரப்படும்.