பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ரும் உருடு உதாரணம் ‘'தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து நேர்ந்து வாமனை நினையின் சேர்ந்த வல்வினை தேய்ந்தக லும்மே.” இதன்கண் முதலடி நாலெழுத்தான் வந்தவாறு காண்க. "குன்று கொண்டு நின்ற மாடு பொன்ற வந்த மாரி சென்று காத்த திறலடி தொழுமே.” இதன்கண் முதலடி ஐந்தெழுத்தான் வந்தது. “ஆறு சூடி நீறு பூசி ஏறும் ஏறும் இறைவனைக் கூறு நெஞ்சே குறையிலை நினக்கே.” இதன்கண் முதலடி ஆறெழுத்தான் வந்தது. 'போது சாந்தம் பொற்ப வேந்தி யாதி நாதற் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே." (யாப். வி. ச.கூ) என்பது முதலடி ஏழெழுத்தான் வந்தது. 'தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினும் ஒளிபெரிது சிறந்தன் றளியஎன் நெஞ்சே' இது முதலடி எட்டெழுத்தான் வந்தது. 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, (குறுந் உ) என்பது ஒன்பதெழுத்தான் வந்தது. 'காமம் செப்பாது கண்டன மொழிமோ.” (குறுந். உ) என்பது பத்தெழுத்தான் வந்தது. "தாமரை புரையுங் காமர் சேவடி.” (குறுந். கடவுள்வாழ்த்து) என்பது பதினொரெழுத்தான் வந்தது. - ‘நாயுடை முதுநீர்க் கலித்த தாமரை' (அகம். காக) என்பது பன்னிரண்டெழுத்தான் வந்தது. 'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி' (பெரும்பாண். க) என்பது பதின்மூன்றெழுத்தான் வந்தது.