பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருசு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை.” (அகம், கசு) என்பது பதினாலெழுத்தான் வந்தது 'ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை ' (புறம் ருகஎ) என்பது பதினைந்தெழுத்தான் வந்தது. 'விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்.” (குறுந் கoக) என்பது பதினாறெழுத்தான் வந்தது. "தேன்துரங்கும் உயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம்.” (மதுரைக் க.) என்பது பதினேழெழுத்தான் வந்தது. 'கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும்,' (புறம் ருரு) என்பது பதினெட்டெழுத்தான் வந்தது. "நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்.” (புறம். ருரு) என்பது பத்தொன்பதெழுத்தான் வந்தது. "அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர்நிற்றலின்’ (புறம், கசு எருo) என்பது இருபதெழுத்தான் வந்தது. பேராசிரியம் : இஃது, எய்தாததெய்துவித்தது; மேல் வகுக்கப்பட்ட அடியினை இன்ன பாவிற்குரிய அடி இவையென்று கூறாதான் அது கூறினமையின். (இ - ள். நாலெழுத்துமுதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ்நிலனும் ஆசிரியத்திற்குரிய (எ . மு.) "மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்த

  • * * * * * * * * அறுநூற்றிருபத் தைந்தாகும்." (தொல்-செய்-50)

என்றான், அதனை ஈண்டுப் போத்தந்து ஆசிரியத்திற்கு எய்து வித்தவாறு. அவற்றுக்குச் செய்யுள் ஐந்தடியுங் கூறியவழிக் காட்டப்பட்டது. மற்று, மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்தும் (362)