பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருக உருக (இ - ள்.) மேற் சொல்லப்பட்ட ஐந்தடியுந் தனித்தனி ஆசிரியப்பாவிற் குரித்தாகி வருதலே யன்றி விரவிவரினும் நீக்கப்படாது என்றவாறு.1 ஒரூஉநிலை' என்றதனால் தனித்தனிவரினும் விரவிவரினும் ஒக்கும் என்று கொள்க. உதாரணம் “செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானைக் கழறொடிச் சேய குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே." (குறுந். க) இதனுட் பலவடியும் வந்தவாறு காண்க. (ருக) �3u I ■ mr&fff w uuio : இஃது, எய்தியதிகந்து படாமைக் காக்கின்றது; மெய்வகை யமைந்த பதினேழ் நிலமெனவும், எழுபது வகையின் வழு வெனவும் மேனிறுத்த (ரும்) முறையானே ஆசிரியத்திற்குப் பதினேழ் நிலமாமாறு கூறினான். இனி, எழுபது வகையின் வழுவாயின. அப் பதினேழ் நிலத்து யாண்டு மாகாதென்பது பட்டதனை இகந்து படாமைக் கூறினமையின்.8 (இ - ள்.) தளைவிரவி விரினும் ஒருவப்படா (எ . று.) மற்று, இதனைத் தளை விரவிவரினுங் கட்டளையாமெனப் புறனடுத்தானென்று கோடுமோ, தளைவிரவிற் கட்டளையடியாகாதென்று கோடுமோவெனின், தளைமயங்காதனவே தளை வகையடியெனவும் அல்லன கட்டளையடி யாகாவெனவுங் கோடுமென்பது அஃதேல் தளைமயங்கின அடிக்கும் பதினேழ் 1. விராய் வருதலாவது, மேற்குறித்த பதினேழ் நிலத்துக் கட்டளையடிகள் ஐந்தும் தனித்தனி வருதலேயன்றித் தம்முட் பலவாய்க்கலந்து வருதல். 2. ஒரூஉ நிலை - ஒருவும் நிலை: நீக்கும் நிலை. 3. பதினேழ்நிலத்து ஐவகையடிகளும் ஆசிரியப்பாவுக்குரியன எனக்கூறிய ஆசிரியர், எழுபது வகையின் வழுவிய வழுவாயின அப்பதினேழ்நிலத்து எவ் விடத்தும் வரப்பெறா என இச்சூத்திரத்தாற் காத்தலின் இஃது எய்தியது இகந்துபடாமைக்காக்கின்றது எனக் கருத்துரைவரையப்பெற்றது.