பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசுச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ - ள் ) தன்சீர்வகையினும்-ஆசிரிய வுரிச்சீரானும்; அதனை அதிகாரத்தாற் கொள்ளப்படும்; தளைநிலை வகையினும்அவ்வாசிரியவுரிச்சீரானாகிய தளைநிலைமைப் பகுதியானும்; இேன்சீர் வகையினும்- இன்சீர்ப்பகுதியானும் , ஐந்தடிக் குமுரியஅவையும் மேற்கூறிய ஐவகையடிக்கும் உரியவாம் (எ - று). ‘ஐந்தடிக்கு முரிய வெனவே பதினேழ் நிலத்தின் இகந்து வாராவென்பதாம். தன்சீரென்னாது ‘வகை யென்றது, அவற்றை இருபகுதியானே, "முன்னிரை யுறினு மன்ன வாகும்" (தொல்-செய். 14) என்றதும், "வெண்பா வுரிச்சீர் ஆசிரிய வுரிச்சீர்” (தொல்-செய். 23) என்புழி உடன்கூறாது கூறிய வேறுபாடும் நோக்கியென்பது அதனது பயம்: வருகின்ற தளைவகைக்காயின் ஆசிரியவுரிச் சீராறுந் தளைகொள்ளப்படா, முன்னிரையீற்ற இரண்டுமல்ல தென்றவாறு. தளைநிலை வகை சிறப்புடைமையின் அது முற் கூறுகவெனின், அங்ங்னமாயினும் அறுவகைச் சீரானுஞ் சீர்வகை யடி வருதல் பெரும்பான்மையாகலானும், அவற்றுள்ளும் நீடு கொடி, குளிறுபுலி என்னும் இரண்டுமே பற்றித் தளைகோடல் சிறுபான்மை நோக்கியுந் தன்சீர்வகை முற்கூறப்பட்டது. அல்லது உந் தளைநிலைவகை முற்கூறின் மேற்கூறிய வியற் சீர்த்தளைமேற் செல்லும்; அவ்வாறன்றித் தன் சீர்த்தளையே கோடற்கும் அது பிற் கூறினானென்பது. மற்றுத் தன்சீரா னாவதனை இன்சீர் வகையொடு ஐந்தடிக்கு முரித்தென்றதென் னையெனின், ஆசிரியவுரிச்சீர் நான்கும் நிரலே நின்றுழி அகவல் 1. ஆசிரியப்பா அதிகாரப்பட்டமையின் தன்சீர் என்றது ஆசிரியவுரிச்ֆ ճծը . 3. தளைநிலைவகை' என்றது. அவ்வாசிரியவுரிச்சீராலாகிய தளைநிலைமைப் பகுதியினை . 3. இன்சீர் வகை என்றது இயற்சீர் வகையினை. 4. ஐந்தடிக்குமுரிய எனவே எழுத்தெண்ணிவகுக்கப்பட்ட பதினேழ்நிலத்தினைக் கடந்து வருதல் இல்லை என்பதாம். 5. நீடுகொடி, குளிறுபுலி என்னும் இருசீர்களையும் ஆசிரியவுரிச்சீர் எனத் தழுவிக் கொண்ட திறம் பற்றித் தன்சீச் என்னாது 'தன்சீர்வகை எனக்குறித்தார்.