பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@_母6》°一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அளவடி முதற்கறியதென்னையெனின், மேல் நிறுத்த முறையாற்கொள்ளாது ஈண்டுச் சொல்லும் முறைமையாற் கூறினானென்பது.1 “நின்று நினைந்து நெடிது பெயர்ந்து' என்பது ஏழெழுத்தடி. “அறிவறிந்தார்த் தேறியக்கா லஞ்சுவ தில்லை’ என்பது பதினான்கெழுத்தடி. இதனும்பர் நெடிலடியானும் வெண்பாவடி வருவன உள. அவை கட்டளையடி யெனப்படா, செப்பிக்கூறும் பாவாகாது செய்கை தோன்றியே நிற்குமாகலினென்பது.2 பிறிது காரணம் *-ண்டாயினும் அறிந்துகொள்க. தளைவகை ஒன்றாமையென்பது: வெண்பாவும் வெண்பா நடைத்தாகிய கலிப்பாவும் மயங்காமை காரணத்தானென்றவாறு. கலியோசை மயங்கி வருவனவும் வெண்பாவடியு ளுள. அவை நெடிலடி மூன்றானும் வருமெனக் கொள்க. ஒரோவடியே வெண்பா வடியுமாய்த், துள்ளிக் கலி யடியுமாகித் தளைவகை ஒன்றுமாகலான் அம்மயக்கந் தீராதென்' SMMSMMAAASAASAASAAAS 1. சிந்து, அளவு என மேல் எழுத்தெண்ணி நிறுத்த வரிசையின்றி அளவும் சிந்தும் என இங்கு முறைமாறிக் கூறியது, இங்கு வெண்பாவடிக்குச் சிறப்புரிமை யுடைய நிலங்கள் இவை என விதி சொல்லும் முறையால் கூறினார் என்பதாம். 2. இதன் உம்பர் - (அளவடிக்குரிய பதினான்கெழுத்தாகிய) இவ்வெல்லைக்குமேல். இங்கு நெடிலடியென்றது. பதினைந்து முதல் பதினேழெழுத்துவரையமைந்த நாற்சீரடியாகிய கட்டளையடியினை. இவ்வாறு பதினாலெழுத்தடி யின் மிக்கன செப்பலோசையினவாகாது துள்ளுதலாகிய செய்கைதோன்ற நிற்குமாதலால், அவை கட்டளையடி யெனப்படா; சீர் வகையடியெனவே கொள்ளப்படும் என்பதாம். செய்கைதோன்றியே என்பது செய்கைதோன்றிய’ என்றிருத்தல் பொருத்தமாகும். தோன்றிய-தோன்ற . 3. தளைவகையொன்றாத் தன்மையான் என்பது என்றிருத்தல் வேண்டும். ஒன்றுதல் விரவுதல்; ஒரேயடி வெண்பாவுக்குரிய செப்பலோசைக்கும் கலிப்பாவுக்குரிய துள்ளலோசைக்கும் பொதுவாக அமைதல். ஒன்றாத்தன்மையாவது அவ்வாறு அடியொன்றே வெண்பாவடியெனவும் கலியடி யெனவும் இருநிலைமையும் பொருந்த மயங்கித் தோன்றாது கலியடியின் வேறுபட்டு வெண்பாவடியே யாகத் தனித்து அமைதல். 4. 'அம்மயக்கந் தராதன என்றிருத்தல் பொருட்பொருத்தமுடையதாகும். பதினைந்து, பதினாறு, பதினேழெழுத்துக்களான் இயன்ற நெடிலடி மூன்றாலும் வரும் வெண்பாவடிகள் கவியோசையோடு ஒன்றி மயங்கிவருவன - வாதலின் அம்மயக்கந் தராதனவாகிய அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய'