பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஇ அf தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கட்டளையடிக்கு அவ்வாறு கோடல் குற்றமென்பது. அல்லதுாஉங் கலிப்பாவிற்குப் பத்துநிலங் கொள்ளிற் கட்டளையடி அறுநூற். றிருபத்தைந்தன்றிப் பல்குமென்பது 1 (ருகr) நச்சினார்க்கினியம் : இது முறையானே கலிக்குரிய நிலங் கூறுகின்றது. (இ-ள்.) இருநெடிலடியும் எ-து நெடிலடியுங் கழிநெடிலடியும். அளவடி ...... ... தோன்றி எ-து அளவடிக்குரித்தென ஐவகையடியின் மிகுதியாகிய பதின்மூன்றும் பதினான்குமாகிய எழுத்துக்களோடு தோற்றப்பட்டு. கலியிற்குரிய எ-து கலிப்பாவிற் குரியவாம். எ று. அளவடி யைந்தனுள் மிகுதியெனவே பதின்மூன்றும் பதினான்குமென்பது பெறுதும். இனிச் சீர்வகையடியாய் இந்நிலங்களைத் தப்பி வருவனவுங் கொள்க.2 உ-ம் ஐயிரு தலையி னரக்கர் கோமான்' (குறிஞ்சிக்கலி) 'சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர்” (பாலைக்கலி- ) எனப் பதினொன்றும் பன்னிரண்டும் எழுத்தான் வந்தன. ஆய்வுரை : இது, கலிப்பாவிற்குரிய கட்டளையடியாமாறு கூறுகின்றது. (இஸ்) அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக நெடிலடியும் கழிநெடிலடியும் ஆகிய இருபதெழுத்தின்காறும் வரும் அடிகள் கலிப்பாவிற்கு உரியன என்று. 1. இனி, ஞாயிறு மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய்' என்பதனைக் காட்டின் அது கலிப்பாவோடு தளைவகையொன்றிய வெண்பாவடியாகும். அது கலியடியாகவேண்டுமாயின் ஞாயிறு என்னும் நிரையிற்றியற்சீர்க்குப்பின் புலிசேர்வாய்' என நிரைமுதல் வெண்சீர் வந்து தளைத்தல் வேண்டும். ஞாயிறு மாசேர்வாய்' என நிரையீற்றியற்சீர்ப்பின் நேர்வந்தமையால் கலித்தளையாகாது வெண்டளையேயாகும். அன்றியும் கலிப்பாவிற்குப் பதின்மூன்றெழுத்துமுதல் இருபதெழுத்துவரை எட்டு நிலமே கொள்ளாது பதினோரெழுத்தும் பன்னிாண்டழுத்தும் என இரண்டு நிலன் ஏற்றிப் பத்துநிலங் கொண்டால் கட்டளை4 625 என மேற்குறித்த வரையறையைக் கடந்து மேலும்பலவாய் மிகும். ஆகவே பதினோரெழுத்து முதலாகக் கொள்ளுதல் குற்றமாம் என்பது. 2. ஈண்டுத் தப்பி வருதலாவது பதின்மூன்றும் பதினான்கும் ஆகிய எழுத்தளவிற் பிறழ்ந்து பதினொன்றும் பன்னிரண்டும் ஆகக் குறைந்து வருதல்.