பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ருள உகி அன் அளவடி என்றது, பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்தளவும் உள்ள எழுத்துக்களாலாய அடிகளை அளவடி மிகுதி. யென்றது, மேற்குறித்த அளவடி ஐந்தனுள் பதின்மூன்றும் பதினான்கும் ஆகிய எழுத்துக்களாலாய அடியினை. இரு நெடிலடியாவன நெடிலடியும் கழிநெடிலடியும் ஆகிய அடிகள். ருள் நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்டல் வரைநிலை இன்றே அவ்வடிக் கென்ப. இளம்பூரணம் : என் எனின், கலித்தளையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட அடி கலித்தளை தட்ட வழியே கொள்ளப்படுவது என உணர்த்தியவாறாம். வெண்பாவுரிச்சீர் நிற்ப நிரைமுதல் வெண்சீர்வந்து அதன்கண் நிரை யாய்த் தளைத்தல் கலியடிக்கு வரைநிலையில்லை என்றவாறு.2 "நிரைதட்டல்’ என்றதனால் பிறிதாகிவருஞ்சீர் முதலாகிய நிரையோடு தளைப்பினுங் கலித்தளையாம் என்று கொள்க.3 நிரைமுதல் வெண்சீர் என்பது, உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது.* உதாரணம் மேற்காட்டிய அடிகளுட் காண்க. (ருஎ) பேராசிரியம் : இதுவுங், கலித்தளை விகற்பங் கூறுகின்றது, 1. தட்பினும்’ என்பது, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. வெண்சீர் முதல் நிற்ப அதன்முன் நிரைமுதலாகிய வெண்சீர் வந்து நேர்முன் நிரையாய்த் தளைத்து நிற்றல் கட்டளையடியாகிய அக் கவியடிக்கு விலக்கும் நிலைமையில்லை எ-று. 3. வெண்சீர் நின்று நிரைதட்டல் எனப் பொதுப்படக் கூறவே பிறிதாகி. வருஞ்சீர் முதலாகிய நிாையொடு தளைத்து நிற்றலும் கலித்தளையாம் என்றவாறு. 4. நிரை முதல் வெண்சீர் வந்து' என வருஞ்சீரைக் குறிப்பிட்டுரைக்கவே அதன்முன் நின்ற சீரும் நிரைமுதல் வெண்சீர் என்பது உய்த்துணர்ந்து கொள்ளப்பட்டது என்றார் இளம்பூரணர். "நிரைமுதல் வெண்சீர் வந்து என வருஞ்சீர் இதுவெனத்தெளித்து மொழிந்தமையால் முதல்நின்றசீர் நிரையீற்றியற்சீரும் திரையீற்றாசிரியவுரிச்சீரும் ஆம் என உய்த்துணர்ந்துரைப்பர் பேராசிரியர்.