பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூஅ ருண்க தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால்திசை போய துண்டே." (சீவகசிந்க க ) என வரும். இதன்கண் யகரம் ஆசாகி வந்தது. பிறவுமன்ன. இனி இரண்டடியெதுகையாவது முதலிரண்டடியு மோரெதுகையாய்ப் பின்னிரண்டும் ஒரெதுகையாகி வருவது. 'உலக மூன்றும் ஒருங்குட னேத்துமாண் திலக மாய திறலறி வன்னடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவுந் தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான்' என வரும். (யாப். வி ப.க.க கூ.) இடையிட் டெதுகையாவது ஒரடி யிடையிட்டுத் தொடுப்பது. "தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழப்ப வாடா வவ்வரி புதைஇப் பச்லையும் வைகல் தோறும் பைபயப் பெருகின நீடார் அவரென நீமனங் கொண்டாற் கேளார் கொல்லோ காதலர் தோழி.இ வாடாப் பவ்வ மறமுகந் தெழிலி பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ ஓடா மலையன் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே” எனவரும். (யாப். வி. ப. கசக.) இவ்வகையினான் மோனை வருவனவுங் கொள்க. பிறதொடையும் இவ்வகையினான் வருவனவும் கொள்க. மூன்றா மெழுத்தொன் றெதுகையாவது இரண்டா மெழுத்து ஒன்றாது மூன்றாம் எழுத்து ஒன்றுவது. இதுவும் அவ்வாறே உதாரணம் வந்தவழிக் காண்க. இவையெல்லாம் மேலெடுத்தோதப்பட்ட தொடைக்கட்படும். நாற் சீரடியொழிந்த அடிக்கண்ணும் இப்பாகுபாடெல்லாம் விரிப்பின் வரம்பிலவாகும். 1. நாற்சீரடிக்குக் கூறிய இத்தொடைப்பாகுபாடு நாற்சீரடியல்லாத ஏனையடிகளிலும் கொள்ளப்படும் என்பதாம்.