பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூ அ ருகக இனி ஐந்துதொடை, விகற்பத்தொடை பலவற்றோடுங் கூட்டவும் பிறவாற்றான் விரிப்பவும் வரம்பிலவா மென்றாருமுளர். அவை எவ்வாறு விரிப்பினும் வரம்பில வல்லனவென மறுக்க.2 வரம்பிலவென்பதற்கு வரையறை கூறப்படாவென மேலுரைத்ததே உரை. நச்சினார் த் திரிையம் : இது கட்டளையடிக்கோர் புறனடை, (இ-ள்.)அறுநூற்றிருபத்தைந்துள் ஒன்றைநிறுத்தி யதனோடு. அறுநூற்று நான்கனையுங் கூட்டியு மதனோடு சீர்வகையடி களையும் விகற்பத்தொடைகளையுங் கூட்டியுந் தொடுக்குந் தொடைப்பகுதிகளை விரிப்பின் எண்ணிறந்து பலவாம்.4 எனவே, இங்ங்னங் கூறாமல் வரையறைப்படுத்தி விலக்கணங்கூறினார் என்றார். எ-று. ஆய்வுரை : இது, மேற்கூறிய தொடைக்கு ஆவதோர் புறனடை, (இ-ள்) முற்கூறப்பட்ட தொடை வகையினை ஆராய்ந்து மேலும் விரித்துரைப்பின் வரம்பில்லாதனவாம் எ-று. தெரிதல் - ஆராய்தல். 1. மோனை முதலாக அளபெடையீறாக இங்குச்சொல்லப்பட்ட தொடை களை இணை, கூழை, முற்று, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், கடை, கடையினை கடைக்கூழை, பின், இடைப்புணர் முதலாகவுள்ள ஏனைய விகற்பத் தொடைகளொடு கூட்டிப்பெருக்க வரம்பிலவாகி விரியும் என்போர் இளம்பூரணர் யாப்பருங்கல வுரையாசிரியர் முதலியோர். 2. இங்குச் சொல்லப்பட்ட தொடைகளை மோனை முதலிய தொடை களோடு உறழ்ந்து பெருக்குமிடத்தும் அவை ஒரு தொகையுட்பட்டு அடங்குவன. வேயாதலின் அவை வரம்பில்லாதன அல்ல, வரம்புடையனவேயாம். என்பது பேராசிரியர் கருத்தாகும். எனவே இச்சூத்திரத்தில் வரம்பில’ என்றது, வரையறையுட்படும் நாற்சீரடியல்லாத இருசீரடிமுதல் எண்சீரடி வரையுள்ள அடிகளோடு இத்தொடைகளைக் கூட்டியுறழ்ந்து வரையறை கூறப்படா என்பதே கருத்து. 3. அறுநூற்றிருபத்துநான்கனையும்’ என்றிருத்தல்வேண்டும். 4. பல்குதல் - பலவாக எண்ணிறந்து விரிதல்.