பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாக குஉங். பாடலிற் பேராசிரியர் விளக்கிக் காட்டிய திறம், சங்கச் செய்யுட்களில் அமைந்த நோக்கு என்னும் உறுப்பினையுணர்ந்து அதனைக் கருவியாகக் கொண்டு செய்யுளின் நயங்களைத் தேர்ந்துணர்வார்க்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை உணர்ந்து போற்றத்தகுவதாகும் తf శ్రీ ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே. இனம்பூரணம் : என்-எனின் நிறுத்தமுறையானே பாவாமாறு உணர்த். துவான் எடுத்துக்கொண்டார். அவை யினைத்தென வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) ஆசிரியமெனவும் வஞ்சியெனவும் வெண்பா வெனவும் கலியெனவும் நான்கியல்பினையுடைத்து என்று சொல்வர் பாவினது வகையை விரிக்குங் காலத்து என்றவாறு. அஃதேல் ஒருசாராசிரியர் வெண்பா ஆசிரியங் கவி வஞ்சி என ஒதினார்; யாதெனின், அவரும் ஒரு பயனோக்கி யோதினார்; இவரும் ஒரு பயன் நோக்கி ஒதினார் என்க. என்னை? வெண்பாவாவது பிறதளையோடு மயங்காமை. யானும் மிக்குங் குறைந்தும் வாராத அடியான் வருதலானும் அந்தணர் நீர்மைத்தென முற்கூறினார். அதன்பின் அந்நிகர்த்தாகிப் பிறதளையும் வந்து இனிய ஓசையையுடைத்தாய்ப் பரந்து வருதலின் அரசத்தன்மையது என்பதனான் ஆசிரியப்பாக் கூறினார். அதன்பின் அந்நிகர்த்தாகிச் சிறுபான்மை வேற்றுத்தளை விரவலின் வணிகர் நீர்மைத்தெனக் கலிப்பாக் கூறினார். அதன்பின் வஞ்சிப்பா அளவடியான் வருதலின்றிக் குறளடியுஞ் சிந்தடியுமாய் வந்து பல தளையும் விரவுதலின் வேளாண்மாந்த ரியல்பிற்றென வஞ்சிப்பாக் கூறினார். இவ்வாசிரியரும் பதினேழ் நிலத்தினும் வருதலானும் இனிய ஓசைத்தாகலானும் அடிப்பரப்பினானும் ஆசிரியப்பா முற்கூறினார். அதன்பின் ஆசிரிய நடைத்தாகி இறுதி யாசிரியத்தான் இறுதலின் வஞ்சிப்பாக் கூறினார்; இந்நிகர்த்தன்றி வேறுபட்ட ஒசைத்தாகலான் வெண்பா அதன்பின் கூறினார்; அதன்பின் வெண்சீர் பயின்று