பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என இன் வாயுறை வாழ்த்தே அவை:படக் கியலே செவியறி வுறு உஎன அவையும் அன்ன, இளம்பூரணம்: என் எனின். ஒருசார் பொருட்குரிய மரபுணர்த்துதல், துதலிற்று (இ-ஸ். வாயுறைவாழ்த்தும் அவையடக்கியலும் செவி யறிவுறுத்தற்பொருளுங் கலியினும் வஞ்சியினும் வரப்பெறா என்றவாறு. எனவே, முன்னையவொப்ப ஏனையிரண்டிலும் வரப்பெறும் என்றவாறாம். (கCஏ) டே ராசிரிய ம் : இதுவும் பாக்களை (மூன்றாக) வரையறுக்கின்றது. (இ-ஸ்) வாயுறை வாழ்த்தும், அவையடக்கியலும், செவி. யறிவுறு உவும் என மூன்றும் மேலைப் புறநிலைவாழ்த்துப்போல் வாழ்த்துப்பகுதியவாகலுங் கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாமையு முடையவென மாட்டெறிந்தவாறு. அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். வாய்-வாய்மொழி; உறை-மருந்து; வாயுறை யென்பது, சொன்மருந்தெனப் பண்புத்தொகையாம்: இனி வாய்க்கட்டோன்றிய மருந்தென வேற்றுமைத் தொகையுமாம்; மருந்துபோறலின் மருந்தாயிற்று அவன் சிறப்புக்கூறி வழுத்தி ஒரு சாத் தற்குப் பயன்படச் சொல்லினமையின் வாயுறைவாழ்த்தென்றானென் பது. மற்று, நிற்புறங் காப்ப வெனப் புறநிலை வாழ்த்திற்கு 1. செவியறிவு நூஉ வென்றவையும் அன்ன என்பது பேராசிரியருரையிலும் இச்சினார்க்கினியருரையிலும் கண்ட பாடம். அன்ன-அத்தன்மைய; என்றது, முற்குறித்த புறநிலைவாழ்த்துப்போல வாயுறை வாழ்த்து அவையடக்கியல் செவியறிவுறுசஉ என்னும் இவையும் கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் வரப்பெறா: வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் வரப்பெறும் என்றவாறு. 2. அவையடக்கியல் என்றதொடர், அவையையடைக்குதல்' என விரிதலின் இரண்டர்ம் வேற்றுமைத் தொகையாயிற்று. அடக்கியல் என்றது அடக்கு இயல் என நின்று. அடக்கிய இயல், அடக்குகின்ற இயல், அடக்கும். இயல் என முக்காலத்திற்கும் ஒப்ப விரிதலின் வினைத்தொகையாயிற்று என்பர் பேராசிரியர்,