பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குசக தொல்காப்பியம் - பொருளதிகாரம் - ೬6Tar இடம் நியமித்தாங்கு இதற்கும் இடநியமங் கூறாரோவெனின், அது, மாட்டேற்றானே அடங்குமென்பது. அவையடக்கியல்-அவையை வாழ்த்துதல், அவையடக்குத சிகன்பது இரண்டாம் வேற்றுமைத்தொகை; அடக்கியலென்பது, வினைத்தொகை; தானடங்குதலாயின் அடங்கியலெனல் வேண்டும். அஃதாவது, அவையத்தாரடங்குமாற்றால் இ னிய) {ளிவர) ச்சொல்லி அவரைப் புகழ்தல். செவியறிவுறுஉ - ஒரு சாத்தற்குச் செவியறிவுபடுத்து அவனை வாழ்த்துதல்; என அவையும் அன்ன - என்ற இம்மூன் தும் அத்தன்மையவேயாம் என்றவாறு, தெய்வத்தொடுபட்டமையிற் புறநிலை வாழ்த்து முற்கூறி இவை பிற்கூறினான். இவற்றுள் வாயுறை வாழ்த்து முன்னிலைக் குரிமையின் அதன்பின் வைத்தான்; முன்னிலைக்கே உரித்தாயினுஞ் செவியறிவுறுஉவினை ஈற்றுக்கண் வைத்தான், பயம்பெறுவானையே நீ இன்ன குணத்தையாவாயென்று புகழ்பட வாழ்த்திச் சொல்லப்படுதல் வேறுபாடுடைமையினென்பது. இங்கனம் வரையறுக்கின்றது நால்வகைப்பாவாகிய உறுப்பினை நோக்கியாகலின், அவற்றுள் இவ்வுறுப்புடைய நால்வகைச் செய்யுட்கும். இவ்வுறுப்பினதிலக்கணம் எய்துவித்துக் கொள்ளப்படும்; கொள்ளவே ஆசிரியப்பாட்டும் வெண்பாட்டும் மருட்யாவும் எல்லா வாழ்த்திற்கும் உரியவென்பது உம் கலிப்பாட்டும் வஞ்சிப்பாட்டும் புறநிலை முதலிய நால்வகைப் பொருட்கும் உரிய வல்லவென்பது உம் பெற்றாம்; என்னை? 1. ஒருசாத்தற்கு என்பது, எவனாயினும் ஒருவனுக்கு, என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. 2. பயம் பெறுவானையே நீ இன்ன குணத்தையாவாயென்று புகழ்பட வாழ்த்திச் சொல்லப்படுதல் வேறுபாடுடைமையின் முன்னிலைக்கேயுரித்தாயினும் செவியறிவுறு:உயினை ஈற்றுக்கண் வைத்தானென்பது. .ே இவ்வுறுப்புடைய - ஆசிரியப்பா, வெண்பா என்னும் பாவுறுப்புடைய. 4. நால்வகைச்செய்யுள் என்றது, புறநிலை, வாயுறை, அவையடக்கியல், செவியறிவுறுஉ என்னும் வாழ்த்தியல்வகை நான்கும் பற்றியமைந்த செய்யுட்களை, .