பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஎல் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்றோதியவதனால் ஆசிரியவடியோடும் வெண்பாவடியோடுங் கவியடியோடும் மயங்கி வருவன கொள்க ! பட்டினப் பாலையுள், 'நேரிழை மகளிர் உணங்குனாக் கவரும்’ (உ.உ) என்பது ஆசிரியவடி, "கோழி எறிந்த கொடுங்காற் கணங்குழை (உங்.) என்பது வெண்பாவடி, 'வயலாமைப் புழுக்குண்டு வறளடும்பின் மலர்மலைந்து’ (காச - ரு) என்பது கவியடி, இனி வெண்பா வாமாறும் கவிப்பா வாமாறும் முன்னர்க் காட்டுதும், (ககக.) இது, மண்டிலமுங் குட்டமும் வருமிட னுணர்த்துதல் துதலிற்று. (இ - ள்) மேற்கூறிய மூன்றனையும் இன்ன பாவென்பது உணர்த்தினான்; அவற்றுள், இறுதிநின்ற மண்டிலமுங் குட்டமும் ஆசிரியப்பாவினை உறுப்பாகவுடைய (எ . ). எனவே ஒத்தாழிசையாகிற் கலிப்பாவினை உறுப்பாக வுடைத்தென்பது பெறுதும்; என்னை? 'ஒத்தா ழிசைக்கவி கலிவெண் பாட்டே கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே' (தொல்-செய்-130) என்பவாதவான்.2 மேற்கூறிய மண்டிலவாசிரியத்தினை, நிலைமண்டிலமெனவும் அடிமறிமண்டிலமெனவும் பெயரிட்டு வழங்குவாரும் உளர் 1. வஞ்சி மருங்கின் எஞ்சிய வுரிய (தொல், செய், உசு) எனத் தொல் காப்பியர் கூறுதலால் வஞ்சிப்பா ஆசிரிய வடியோடும் வெண்பாவடியோடும் கலியடியோடும் மயங்கிவரப்பெறும் என்பது புலனாம். பட்டினப் பாலையென்னும் வஞ்சிதெடும் பாட்டினுள் இவ்வடிகள் மயங்கி வருதல் காணலாகும். 2. மண்டிலமும் குட்டமும் ஆசிரியப்பாவினையுறுப்பாகவுடையவெனவே க்தாதிசைக்கலியாயின் கலிப்பாவினையுறுப்பாகவுடையதென்பது பெறப்படும்.