பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாக உ அருரு அகன்றுபட்ட பொருளையும் அறிவித்தல்போலத் தேர்தல்வேண் டாமை அகன்றபொருள் அடங்குமாற்றான் அச்செய்யுளுள் தோன்றச்செய்து முடிக்கப்படுவது (எ . று). (கசு கூ) நச்சினார்க்கினியம் : இது முறையே சூத்திரவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) அவற் ... ... ன்றி எது அந்நான்கனுள் ஒருபொருணு தலுஞ் சூத்திரமாவது. ஒருபொருணுதலுங்காற் கண்ணாடி சிறிதாயினும் அகன்றுபட்ட பொருளை யறிவித்தாங்கு அறியத் தோன்றி நாடு ...... ங்க எது தெரிதல் வேண்டாதபடி? அவ்வகன்ற பொருளை மிகவும் விளங்குமாற்றால். யாப் - ... பதுவே எமது செய்யுளுட் டோன்றச்செய்து முடிக்கப்படுவது. எ-று. ஆய்வுரை : இது, சூத்திரத்தின் இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ஸ்) மேற்கூறப்பட்ட நூல்வகை நான்கனுட் சூத்திரம் என்பது, கண்ணாடியானது தன்னெதிர்ப்பட்ட பொருள் மலை போன்று பெரிதாயினும் தன்கண் நுண்ணிதாய் அடங்கி வெளிப் பட்டுத் தோன்றப் புலப்படக் காட்டுதல் போன்று ஆசிரியன் சொல்லக் கருதிய பொருள் கற்போர் யாவர்க்கும் தெளிவாகப் புலப்படுத்திக் காட்டும்வண்ணம் குறித்த யாப்பில் அப்பொருள் இனிது விளங்கித் தோன்றுமாறு சொற்சுருக்கமும் பொருள் தெளிவும் உடையதாய் இயற்றப்பெறுவதாகும். எ-று. ஆடி என்றது, முகம் பார்க்கும் கண்ணாடியினை. ஆடி நிழலின் அறியத் தோன்றுதலாவது, கண்ணாடியில் எதிர்ப்பட்ட பொருளின் நிழலுருவம் தெளிவாகப் புலப்பட்டுத் தோன்றுமாறு போன்று ஆசிரியன் அச்சூத்திரத்தாற் சொல்லக் கருதிய பொருள் முழுவதும் கற்பார்க்கு விளங்கித் தோன்றுதல். நாடுதல்-ஆராய்தல். ஆராய்தல் இன்றிப் பொருள் இனிது விளங்க யாத்தலாவது, சூத்திரத்திலுள்ள இச்சொல்லுக்குப் பொருள் யாதோ எனக் கற்போர் ஆராய வேண்டாது உலக வழக்கில் எளிதிற் பொருளுணர்த்தும் இயற்சொற்களால் 1. தேர்தல் வேண்டாது - இதனுட்குறித்த பொருள் யாது? எனத் தேர்ந்து ஆராய வேண்டாது; 2. துணுகி ஆராய்தல் வேண்டாது.