பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருக தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இயற்றப்பெறுதல், சூத்திரத்தின் இலக்கணம் உணர்த்தும் இச்சூத்திரமே அதற்குச் சிறந்த இலக்கியமாகவும் அமைந்துள் ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும். வசுங் நேரின மணியைநிரல்பட வைத்தாங்கு ஓரினப் பொருளை ஒருவழி வைப்பதி ஒத்தென மொழிய உயர்மொழிப் புலவர். இளம்பூரணம் : என்.எனின் ஒத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இபள்.) ஒத்தவினத்ததாகிய மணியை ஒருங்கே கோவைப் பட வைத்தாற்போல ஒரோரினமாக வரும்பொருளை ஒரிடத்தே சேரவைத்தல் ஒத்தென்று பெயராம் என்றவாறு. எனவே, அவ்வினமாகிச் சேர்ந்தநிலைக்கு ஒத்தென்று பெய ராயிற்று. அது, வேற்றுமையோத்து' என்பதனானறிக (கசுங்) பேராசிரியம் : இஃது ஒத்திலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேல், இனமொழி கிளந்த ஒத்து என்றான், அங்ங்னம் இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்துகிடப்பப் பல ஒத் தாகச் செய்யாது நேரினமணியை நிரலே வைத்தாற்போல ஒரி னப்பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஒத்தாவது (எ . ). நேரினமணியெனவே, ஒருசாதியாயினுந் தம்மின் ஒத்தனவே கூறல்வேண்டு மென்பதாம். வேற்றுமையோத்தும் வேற்றுமை மயங்கிலும் விளிமரபும் என மூன்றன் பொருளும் வேற்றுமையென ஓரினமென்று ஒரோத்தாக வையாது வேறு வேறு வைக்கப்படு மென்பது. உயர்மொழிப் புலவரென்பது, அங்கனம் நூல்செய் தல் உயர்ந்தோர் கடனென்றவாறு, (கனC) 1. நேர் இனமணி-ஒத்த இனத்ததாகிய மணி, ஒத்து-இயல். 2. நேர் இனமணி என்றது, ஒன்பான்வகை மணிகளுள் ஓரினத்தவாய் திறத்தால் ஒத்துள்ள மணிகளை. எனவே ஒருசாதிப்பொருளாயினும் தம்மின் ஒத்தனவற்றுக்குரிய இலக்கணங்கூறும் பகுதியே ஒத்து என்னும் உறுப்பாகும் என்பதாம். சொல்லதிகாரத்துள் வேற்றுமையிலக்கணம் உணர்த்தப்போந்த தொல்காப்பி யனார் அதனை ஓரியலாகக்கூறாது வேற்றுமையியல், வேற்றுமைமயங்கியல்: