பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாசு கூ அ; 5 கி. (இள் ஒப்போடே புணர்ந்த உவமை நிலையானும் பிசி பாம்: தோன்றுவதனைச் சொன்ன துணிவினானும் பிசியாம் என்றவாறு.1 'அச்சுப்போலே பூப்பூக்கும். அமலேயென்னக் காய்காய்க்கும்’ என்பது பிசி. இது உவமைபற்றி வந்தது.2 இது, முறையானே பிசி இரண்டெனப்படு மென்கின்றது (இ=ள்). ஒப்பொ டு புணர்ந்த வுவமமென்பது தன்கட் கிடந்த ஒப்புமைக் குணத்தோடு பொருந்திவரும் உவமப்பொரு ளானும்: மற்று இனி ஒன்று சொல்ல ஒன்று தோன்றுந் துணி விற்றாகச் சொல்லுஞ் சொல்லானுமென்று இவ்விரு கூற்றதாகும் பிசி கூறுபடும் நிலைமை (எ-று). அவை 'பிறைகள்வி மலைநடக்கும்” என்பது ஒப்பொடு புணர்ந்த உவமம். இஃது யானையென்றாவது, 1. சொல்லவேண்டிய பொருளை வெளிப்படக் கூறாது. உவமையொடு புணர்த்துக் கூறி அதுகொண்டு உவமேயப் பொருளை உய்த்துணர வைத்தல். 2. யானைசெல்லும், என வெளிப்படச் சொல்ல வேண்டிய நிலையில் அவ்வாறு கூறாது பிறை கவ்வி மலை நடக்கும்" என உவமானத்தாற் குறிப்பிற் புலப்பட வைத்தல் ஒப்போடு புணர்ந்த உவமம் என்னும் பிசிவகை யாகும். இவ்வாறு ஒப்போடு புணர்ந்த உவமானத்தாற் கூறாமல் தாம் சொல்லக்கருதியதனைமறைத்துக் கூற்றிடையே இவர் கூறுவது இதுதான் எனக் குறிப்பிற் புலப்பட்டுத் தோன்றுமாறு செய்தல் தோன்றுவது கிளந்த துணிவு என்னும் பிசிவகையாகும். இதற்கு எடுத்துக்காட்டாக அச்சுப் போலே பூப்பூக்கும்: அமலேயென்னக் காய்காய்க்கும்’ என்பதனைக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இது உவமையற்றி வந்தது என்னும் உரைத்தொடர்க்குரிய பிறைகள்வி மலை" நடக்கும், என்னும் எடுத்துக்காட்டு ஏடெழுதுவோரால் விடுபட்டிருத்தல் வேண்டும். 3. தன் கண் அமைந்த ஒப்புமைக் குணத்தோடு பொருந்திவரும் உவமப்பொருளொடு புணர்த்திச் சொல்ல அதனோடொத்த உவமேயப்பொருள் இது. வெனப் புலப்பட்டுத் தோன்றும் நிலையில் அமைந்தது, ஒப்பொடு புணர்ந்த உவமம் என்னும் பிசிவகையாகும். பிறை என்னும் உவமத்தால் யானையின் தந்தமும் மலையென்னும் உவமத் தால் யானையும் புலனாதல் காண்க. எண்ணார்முத்தமீன்று மரகதம் போற்காய்த்துக் கண்ணார் கமுகு பவளம் பழுக்குங்கலிக்காழி, எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத்தொடரில் கண்ணார் கமுகு, என்னும் எழுவாயைக் கூறாது மறைந்த நிலையில் அஃது ஒப்பொடுபுணர்ந்த உவமத்தானாகிய பிசியாதல் காணலாம். 4. ஒன்றுசொல்ல ஒன்று தோன்றுந் துணிவினதாகச் சொல்லும் சொல் என்றது, நெருப்பு' எனச்சொல்ல எண்ணி. அதனை வெளிப்படக்கூறாது நிறஞ்