பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.அ.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ன எரு அடிநிமிர் கிளவி ஈரா றாகும் அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே ! இளம்பூரணம் : என்.எனின். இதுவும் பண்ணத்தி பாகுபடுமாறு உணர்த்து தல் நுதலிற்று. பண்ணத்தி யெனினும் பாவினமெனினு மொக்கும். 'நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (செய்யுளில், க.க.) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க. 2 (இஸ்.) நாற்சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் என்றவாறு : இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லாவடிகளானு மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம், பன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசைதுறை விருத்தமென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம், ! அவற்றுள் தாழிசையாவது:-ஆசிரியத்தாழிசை, வஞ்சித் தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது;-ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது:. ஆசிரிய விருத்தம், வஞ்சிவிருத்தம், வெளி. விருத்தம், கவிவிருத்தம் என நான்காம், அவற்றுள் ஆசிரியத் தாழிசையாவது மூன்றடி யொத்துவருவது. 1. இதன் முதலடியினை ஒருசூத்திரமாகவும் இரண்டாமடியினை மற்றொரு சூத்திரமாகவும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். 2. அடி' என்றது ஈண்டு நாற்சீரடியை. நிமிர்தலாவது நாற்சீரின் மிக்குவருதல். 3. கிளவி என்னுஞ்சொல் இங்குப்பாட்டு என்னும் பொருள்பட நின்றது. அடி இகந்து வருதலாவது நாற்சீரடியின் வேறுபட்டு வருதல். 4. நால்வகைப்பாக்களின் பாவுறுப்புடன் ஒத்த தன்மையவாய்த் தாழிசை துறை விருத்தம் என மூவகைப்படவருதலின் பண்ணத்தியெனப்படும். பாவினங் கள் பன்னிரண்டாயின என்பது இளம்பூரணர் கருத்தாகும்.