பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எ ருக. இகரக்குறுக்கம் போலாது செய்யுட்கு உபகாரப்பட்டதோர் அசை வேறுபாடு தோன்ற நிற்குமென்றவாறாயிற்று.1 மற்று எண்ணப்படாதென்றது ஈண்டுக் கூறல் வேண்டுமே ? 'உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ' (தொல்-செய். 44) என்புழிப் பெறுதுமாலெனின், அது குற்றுகரத்திற்கே கூறிய தென்பது ஆண்டுச் சொல்லுதும். . உதாரணம் : 'மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னும்" (தொல்-சொல்-இடைச்-26) எனவும், 'அருளல்ல தியாதெனிற் கொல்லாமை” (குறள், 254) எனவும் இவை இயலசை சார்ந்து ஒற்றியற்றாகிக் குற்றிகரம் வந்தவாறு. நாகியாது வரகியாது எனக் குற்றிகரம் உரியசை சார்ந்து ஒற்றியற்றாகி வந்தவாறு. அது நிரையும் நிரை புஞ் சார்ந்து ஒற்றியற்றாமாறு இல்லையோலும் (மியாயிக’ என்பது பாதிரி; அருளல்ல தியாது’ என்பதும் நாகியாது’ என்பதும் போரேறாம்; வரகியாது' என்பது கடியாறாம். பிறவும் அன்ன; இவற்றையெல்லாம் 'ஒற்றெழுத் தியற்றே யென்பதனாற் புள்ளியிட்டெழுதுக.2 இது சொல்லிய காரணங், குற்றுகரம் அரைமாத்திரைத்தாகியும் ஒற்றியற்றாகாது நேர்பும் நிரைபும் ஆகியவாறுபோல அதற்கு இனமாகிய குற்றிகரமும் அரைமாத்திரத்தாகி வேறோரசையாகுங் கொல்லென்று ஐயுறா மற். காத்தவாறு. மற்று ஆய்தத்தினையும் ஒற்றியற்றென்னாமோ வெனின், அஃது எழுத்தோத்தினுள், ‘எழுத்தோ ரன்ன? (தொல்-எழுத். நூல்-2) என்பதனாற் பெற்றாமென்பது. மற்று, 'முந்தியாய் பெய்த வளைகழலும்’ (யா. வி. ப. 43) எனவும், நினக்கியான் சொல்லிய தின்ன தின்று” ' குற்றியலிகரம் எல்லாவகையானும் ஒற்றெழுத்தின் தன்மையது எனவே அதனுடன் வைத்து எண்ணப்படும் குற்றியலுகரம் ஒற்றெழுத்தின் இயல்பின. தாயினும் செய்யுட்கு உபகாரப்பட்டதோர் அசைவேறுபாடு தோன்ற அசைக்கு உறுப்பாயும் நிற்கும் என்பது பெறப்படும். Ž, ற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய இவற்றையெல்லாம் ெ ால்காப்பி 登。 குற்திய இது ஆ இவறறை த யனார் விதித்தவண்ணம் புள்ளியிட்டு எழுதுதல்வேண்டும் எனப் பேராசிரியர் ததத I-ք பணித்தவாறு காண்க.