பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூசசு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் (இ ள்) ஞாயிறு, திங்கள், அறிவு, நாண், கடல், கானல், விலங்கு, மரம், என்பனவும் தனிமையுணர்வு மிகுதிப்படும் பொழுது, பறவை, நெஞ்சம் எனச் சொல்லப்பட்டனவும் ஆகிய பதினொன்றும் ஒன்றைக் கூறுதலும் கேட்டலும் இல்லாத அவை போல்வன பிறவும் தாம் கருதிய நெறியினால் ஒன்றைச் சொல்லுவன போலவும் கேட்பன போலவும் சொல்லி அமையப் பெறும் என்பர் புலவர் எறு. ஏகாரம் எண்ணுதற் பொருளில் இடையிட்டு வந்தமை காண்க. கேளாதன சில பொருள்கள் கேட்பனவாகவும் மறுத்துரைப் பனவாகவும் செய்யுந் திறமில்லாதன செய்வனவாகவும் பொருளியலுள் வழுவமைக்கப்பட்டன. அவற்றுட் சில இலக்கண வகையாற் கூறுவனவும் கேட்பனவுமாகச் செய்யுள் செய்தலும் புலனெறி வழக்கமாம் என்பதுணர்த்துவார். "நுதலிய நெறியாற் சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லி யாங்கு அமையும் என்மனார் புலவர் என்றார் ஆசிரியர். *காரணம் முன்னுரைகளிற் காட்டப்பெற்றன. விக் ங் ஒருநெறிப் பட்டாங் கோரியல் முடியுங் கரும நிகழ்ச்சி இடமென மொழிய, இளம்பூரணம் : என்-எனின். நிறுத்த முறையானே இடமாமாறு உணர்த்து தல் துதலிற்று, (இன்.) ஒருவழிப்பட்டு ஒரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சி இடமென்று சொல்லுவர் என்றவாறு. நிகழ்ச்சி, நிகழ்ந்தவிடம். ஒருநெறிப் படுதலாவது -அகமாயினும் புறமாயினும் ஒரு பொருண்மேல் வருதல், ஒரியல் முடிதலாவது-அகத்தின்கட் களவென்றானும் கற் பென்றாலும் அவற்றின் விரிவகையில் ஒன்றானும் பற்றி வருதல். புறத்தின்கண் நிரைகோடலானு மீட்டலானு மேற் செலவானும் எயில் வளைத்தலானும் யாதானுமோ ரியல்புபற்றி வருதல். அகம்புறம் என்பவற்றுள் ஒருபொருள்மேல் பொருந்தியதொரு நெறி யினைப் பற்றி யாதானும் ஒருசெயல் நிகழுங்கால் அதற்காகும் இடத்தோடும் கூட நிகழ்தலைப் புலப்படுத்தலே இடமென்னும் செய்யுளுறுப்பாம் என்றவாறு,