பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - ள கூக శ్రీ శ్రీrf_ தோரிடத்தே கூறுவோர்க்குங் கேட்போருக்கும் ஏற்றயுரையாகிச் செய்யுளுட் கிடத்திக் கூறுவது முன்னம், எறு இவரிவர்க்குரிய வென்றறிவான் செய்யுட் கேட்போனெனவும் அவ்விடத் தவரவர்க் குரைக்க வென்றார் ஆசிரியரெனவுங். கொள்க. என்றென்பது ஈண்டுவினையெச்சம்;சொல்லெச்சமன்று. அறியவென வொருவினை வருவிக்க. அது உரைப்பதையென்னும் வினைப்பெயரொடு முடியும். (உ-ம்) 'யாரிவ: னெங்கந்த கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து’ (கலி-அக) என்றக்கால் இது கூறுகின்றாள் தலைவி யென்பது உங் கூறப் பட்டான் தலைவனென்பது உம் முன்னத்தான் உணரப்பட்ட வாறு காண்க. இவை அகம் புற மென்னும் இரண்டற்கும் பொது. ஆய்வுரை: இது முன்னம்’ என்னும் உறுப்பாமாறு கூறுகின்றது. (இ-ள்) “இவ்விடத்துத் தோன்றிய இக்கூற்றினைச் சொல்லு. தற்குரியாரும் கேட்டற்குரியாரும் இன்னார்' என்று அறியுமாற்றால் அவ்வாறு அறிதற்கு ஒர் இடம் நாட்டி அவ்விடத்துக கூறுவார்க்கும் கேட்பார்க்கும் ஏற்ற உரை செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் என்னும் உறுப்பாகும். எறு: “யார் இவன் என் கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக்கு ஒத்த படிறுடைத்து’ (கலித்-89} என்றக்கால், இதனைக் கூறுகின்றாள் தலைவியென்பதும் இங்ங்னங் கூறப்பட்டான் தலைவன் என்பதும் குறிப்பினால் அறிய வைத்தலின் இது முன்னம் என்னும் உறுப்பாயிற்று. 1. (இ-ள்) இவ்விடத்துத் தோன்றிய இம்மொழி கூறற்குரியாரும் கேட்டற்குரியாரும் இன்னார் என்று அச்செய்யுட்கண் அறியுமாற்றான் அங்ங் ைமறிதற் குரித்தாக நாட்டியதோ ரிடத்தே கூறுவோர்க்கும் கேட்போர்க்கும் ஏற்ற உரையாகச் செய்யுளுட்கிடத்திக் கூறுவது முன்னம்". எறு என இவ்வுரை அமைந்திருத்தல் வேண்டும். இதன்கண் தோன்றின் அறியாமற்றான்" என்றிருப்பது ஏடெழுது வோரால் நேர்ந்த பிழை. "அறியாமற்றான்' என்பதனை 'அறியுமாற்றான்' எனத் திருத்துக.