பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் ... துாற்பா உள கூகூரு “கைகவியாச் சென்று கண் புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்திங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறன. சை.இச் சென்றவென் னெஞ்சே” (அகம்.9) என்றாற்போலச் செய்யுள் செய்தவன் தானே வகுப்பன வெல் லாங்கோடல்; இது பாலைப்பாட்டினுள் வந்ததாயினும் முல்லை முதலாயவற்றுக்கும் பொதுவாமென்பது. பொதுமை என்பது எல்லா வுரிப்பொருட்கும் ஏற்கப் பல்வேறு வகையாற் செய்தல். (உ0அ) நச்சினார்க்கினியம் : இது பொருளென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இன்.) இன்...என்றி.எ-து இன்பமுந் துன்பமும் புணர்தலும் பிரிதலும் உலகவொழுக்கமு மெனப்பட்ட இவை தப்பும்வழி யின்றி, இது...து. எ-து இத்திணைக்குரியபொருளிதுவாகவென்று ஆசிரிய ரோதிய பொருளன்றி. பொது ப எது அவற்றுக் கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப்படுவது பொருட் கூறெனப்படும். எ-று. இன்பத்துன்பங் கூறுதலிற் புறத்திற்குங்கொள்க!. ஒழுக்கம் இரண்டற்குங் கொள்க. வகையென்றதனாற் புலவன்றான் வகைந்ததே பொருளென்று கொள்க. அதுவின்றிச் செய்யுள் செய்தலாகாதென்பது கருத்து. உ-ம். 'கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுத லந்தீங் கிளவிக் குறுமகண் மென்றோள் பெறநசைஇச் சென்றவென் னெஞ்சே” (அகம்-க) 1. இன்பமும் துன்பமும் கூறுதலால் இப்பொருள் வகையினை அகத்திற். கேயன்றிப் புறத்திற்கும் கொள்க என்றார். ஒழுக்கம் இரண்டாவன களவும் கற்பும் ஆகிய இருவகை ஒழுகலாறுகள்.