பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உககூ இது இ இ. முள்ளிற் பொதுளிய அலங்குகுலை நெடுவெதிர் பொங்குவா விளமழை துவைப்ப மணிநிலா விரியுங் குன்றுகிழ வோற்கே’ (யாப். வி.ப. க.அசு) (உகக) எனவரும். (இஸ்.) யாற்றொழுக்குப்போலச் சொல்லிய பொருள் பிறி தொன்றனை அவாவாமை அறுத்துச் செய்வது ஒரூஉவண்ணம்! (எ-று) . ஒரீஇத்தொடுத்தலென்பது எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையால் தொடுத்தலென்பாரும் உளர். செந்தொடை யுந் தொடையாகலான் அற்றன்றென்பது; அது, "யானே யிண்டை யேனே யென்னலனே யானா நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகி மன்றத் தஃதே' (குறுந்: 97) என வரும். "சிறியகட் பெறினே யெமக்கீய மன்னே' (புறம்: 235) என்பதும் அது. யாப்புப் பொருணோக்கியவாறுபோல இது பொருணோக் காது ஓசையே கோடலானும் அடியிறந்து கோடலானும் யாப் பெனப்படாது.8 (உஉள்) 1. ஒரீஇத் தொடுத்தல் என்பது செய்யுளிற் சொல்லிய தொடர்ப்பொருள் கள் பிறிதொன்றனை யவாவாது தனித்தனியே முடிய ஆற்றொழுக்குப்போல அறுதிப்பட்டுச் செல்லுதல். 2. ஒருதொடையும் அமையப்பெறாதது செந்தொடையென்பது பிற்கால யாப்பிலக்கண நூலார் கொள்கை. செயற்கையாகப் பறித்துத் தொடுக்கப்படும் மாலைபோலாது கொன்றையும் கடம்பும்போலத் தன்னியல்பில் அமைந்த தொடை செந்தொடைதொடையென்பது தொல்காப்பியனார் கருத்தாகும். ஆகவே ஒரீஇத்தொடுத்தல் என்பது எல்லாத் தொடையும் நீக்கித் தொடுத்தல் செந்தொடை யென்றல் பொருந்தாது என்பதாம். 3. முற்கூறிய செய்யுளுறுப்புக்களுள் யாப்பு என்னும் உறுப்பு செய்யுளும் கூறப்படும் பொருளை நோக்கியதாய் அடிவரம்பினதாய் அமையும். வண்ண் மாகிய இவ்வுறுப் புப்பொருளை நோக்காது ஓசையையே கொண்டுநிற்கும். அவ் வோசை அடியினைக் கடந்தும் கொள்ளப்படும். எனவே யாப்பு வேறு வண்ணம் வேறு வண்ணம் யாப்பெனப்படாது என்பதாம்.