பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/840

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உங்க கCஉக வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வது. அது, முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப. (2. க. கூர் நச்சினார்க் திரிையம் : இது விருந்து கூறுகின்றது. (இ.ஸ்) விருந்தென்று கூறப்படுவதுதானும் புதிதாகத் தொடுக்கப்படுந் தொடர்நிலைச் செய்யுளின்மேற்று எறு." தானுமென்றவும்மை இறந்ததுதழி இயிற்று. முற்கூறிய தோல் பழைய கதையைப் புதிதாகக் கூறலென்றும், இது பழையதும் புதியதுமாகிய கதை மேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர்நிலைச் செய்யுள் செய்வதென்றும் பொருள் தருதலின் அவை முத்தொள்ளாயிரம் பின்னுள்ளார் பாட்டியன்மரபிற்ககூறிய கலம்பகச்செய்யுள் முதலியவற்றைப் பாடுதலுமாயிற்று2. ஆய்வுரை : இது, விருந்து என்னும் செய்யுள் வனப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) விருந்தென்பது, புதிதாகச் சொன்ன யாப்பின் மேலதாம் எறு. "புதிதாகப் புனைதலாவது. ஒருவன் சொன்ன நிழல்வழியன்றித் தானே தோற்றுவித்தல்’ என்பர் இளம்பூரணர். ‘புதுவது கிளந்த யாப்பின் மேற்று என்றது புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச்செய்வது. அது முத்தொள்ளாயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க. கலம்பக முதலா. யினவுஞ் சொல்லுப” என விளக்குவர் பேராசிரியர். முற்கூறிய தோல் என்பது பழைய கதையைப் புதிதாகக் கூறலென்றும், ஈண்டுக் கூறிய விருந்தென்பது பழையதும் புதியதுமாகிய கதைமேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர்நிலைச் செய்யுள் செய்வதென்றும் இவ்விருவகை வனப்பிற்கு மிடையேயுள்ள வேறுபாட்டினை விளக்குவர் நச்சினார்க்கினியர். 1. விருந்து என்பது, புதியவாயினவற்றின்மேற்று. அவை இப்பொழு தள்ளாரைப்பாடும் பாட்டு' என்பர் யாப்பருங்கலவிருத்தியாசிரியர். 2. பேராசிரியர் உரையினை அடியொற்றி யமைந்தது இவ்விளக்கம்.