பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 141 (இ-ன்). நூலுக்கு இன்றியமையாத இயல்பாகிய மரபு நிலை மாறுபடாத மாண்பினையுடையவாகி ஆசிரியனால் உரைக்கப்படும் இலக்கண நூல்கள்தாம் அவையமைந்த நெறி முறைமையின் முதல்நூல், வழிநூல் எனக் கூறப்பட்ட இருவகை இயல்பிற்பட்டு அடங்குவனவாகும் (எ-று). உரைக்கப்படும் எனற்பாலது, உரைபடும் என விகாரத் தால் தொக்கிநின்றது. இறையனார் களவியலுரையாசிரியர் 'நூல்தான் மூன்று வகைப்படும். முதல்நூலும் வழிநூலும் சார்புநூலும் என; என்னை? - 'முதல்வழி சார்பென நூன்மூன் றாகும்’ என்றாராகலின்’ (இறையனார் களவியலுரை. சூ-1) என நூல் களை மூவகைப்படக் குறித்துள்ளார். முதலில்தோன்றிய நூலினை முதல்நூல் எனவும், அதனையொட்டி இரண்டவதாகத் தோன்றிய முதனுாலிற்கிடந்த பொருளை ஒர் உபகாரப்பட ஒர் ஆசிரியன் வழிநூல் செய்த பின்னர் ப் பின்னர், ஒர் ஆசிரியன் சார்புநூல் செய்ததனாற் பயன்யாது? என மறுப்பார்க்கு, வழிநூலும் பிற் காலத்து உணர்தற் கரும்பொருளதாயின் அதனையும் எளிதாக்கிக் கொடுத்தல் சார்புநூலாற் பெற்ற பயன் என விடை கூறுவர், அத்தகைய சார்புநூலும் பின்னொரு காலத்து உணர்தற்கரிதாயின் தோன்றிய நூலினைச் சார்புநூல் எனவும் அதன்பின்னர் நூல் செய்யப்பெறார் எனவுங் கொள்ளாமோ? என வினவினார்க்கு, நூலினை வழிநூல் எனவும், அதனையொட்டி மூன்றாவதாகத் அதனையும் எளிமையுடையதாக்கிப் பிற்காலத்தொருவர் நூல்செய் தால் அந்நூல் மேற்குறித்த மூவகை நூல்களில் எதன் பாற்படும் என்ற வினா எழும். சார்பு நூலைப் பற்றி ஒரு நூல் பிறந்தவழி வழிச்சார்பின் சார்பு எனவும் அதனைப் பின்பற்றித் தோன்றிய நூலினைச் சார்பின் சார்பின் சார்பு எனவும் இவ்வாறு வெவ் வேறு நூற்பெயர்களைப் படைத்துக் கூறிக்கொண்டே சென்றால் வரம்பின்றியோடுதல் என்னுங் குற்றந்தங்குமாதலின் அவ்வாறு நூற்பெயர்களை மேன்மேலும் பெருக்கிக்கொண்டே போகாமல். எல்லா நூல்களையும் முதல்நூல், வழிநூல் என்னும் இருவகை யிலேயே அடக்கிக் கூறுதல் மரபு என அறிவித்தற் பொருட் டே 'உரைபடு நூல்தாம் முதலும் வழியும் என துதலிய நெறியின் இருவகையியல, என்றார் ஆசிரியர் எனப்பேராசிரியர் தரும் விளக்கம் இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.இனி, 'சார்புநூல்