பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரவியல் 177 மறுதலையும் மாற்றமுமென்பது கடா விடை: ஐயமும் மருட்கையுஞ் செவ்விதிணிக்கல் ஒருபுடை யொப்புமையுடைய போலியும், அதற்கு ஒன்றும் இயைபில்லாத பொய்ப்பொருளு மெனப்படும். பிறிது பிறிதேற்றலு முருபுதொக வருதலும் ” - (தொல்-சொல்வேற். ம 21) என்றவழிப் பிறிதென்று ஒருகாற் சொல்ல ஆறாமுருடெனவும், பின்னொருகாற் பிறிதென ஒழிந்த உருபெல்லாந் தழுவுமெனவுஞ் சொல்லுதல் போலியெனப்படும்; என்னை? அவ்வாறாவதனோடு ஏழாமுருபும் பிற்வுருபேற்கும் வழக்குள் வழி ஒன்றனைக் கொண்ட மையின் அஃது ஒருபுடை யொப்புமையுடைத்தாகி அப்பொரு என்றெனவும்படாது மற்றொன்றினைக் கோடல் பொருளெனத் துணியவும்படாது ஐயவுணர்வு செய்தமையின், அது போலி யாயிற்று. இனிப், பிறிது பிறி தேற்றலும் உருபுதொக வருதலும் ' என்னும் இரண்டும்மையும் பொருளிலவென்று பிறிது பிறிதேற் றலும் உருபுதொக வருவதற்கண்ணென்று பொருள் கூறுதல் போல்வன, சூத்திரத்தின் கருத்தறியாது பொய்யை மெய்யென்று மயங்கிய மருட்கை யெனப்படும். இவ்விரண்டனையும் நீக்தி உண்மை உணர்த்துதல் உரையெனப்படுவதாயிற்று. நிற்றலென் பது நிற்க அவ்வுரை யென்றவாறு. தன் நூலானும் முத்னூலா னும் ஐயமும் மருட்கையும் நீங்குங்கால் அவற்றுட் கிடந்த செம்பொருளானே நீக்கப்படுமென்பது இரண்டு கண்ணானுங் கூர்மையாற் பார்த்தா னென்பது போலக் கொள்க ஆய்வுரை : இஃது, எய்தியதன் மேற்சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) சூத்திரப் பொருளை இடைமறித்து வினவும் வினாவும் அவ்வினாவிற்கு மறுமொழியாகிய விடையும் உடைய தாய்த் தான் உரை செய்தற்குரிய நூலின் சூத்திரத்தாலும் அத் நூலின் பொருண்மை முற்ற முடிந்த நூலாகிய முதனுாலாலும் ஆயவுணர்வையும் திரிபுணர்வையும் அறவே நீக்கிக் கவர்படு பொருளின்றித் தெளிவாக ஒருபொருளை ஒற்றுமைப்படுத்து