பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78 தொல்காப்பியம் இதற்கு இதுவே பொருள் எனத் துணிந்துரைக்க என அறிவுறுத் துவர் புலவர் எ-று. மறுதலைக் கடாஅ இடைமறித்துத் தடை செய்வதாகிய வினா. மாற்றம் - அவ்வினாவிற்கு மறுமொழியாகிய விடை. தன்னுால் என்றது, உரையாசிரியன் தான் உரையெழுதத் தேர்ந்து எடுத்துக் கொண்ட நூலினை. முடிந்த நூல் என்றது, தனது நூலின் பொருண்மையினை முற்ற முடித்துக் கூறுவதாகிய முதல் நூலினை. ஐயமாவது, இதற்குப் பொருள் இதுவோ அது வோ என ஒன்றினுந் துணிவுபிறவாத நிலையிலுள்ள பல தலையாய உணர்வு. மருட்கை -- மயக்கம்; என்றது ஒன்றை மற்றொன்றாகக் கொள்ளும் திரிபுணர்வினை. செவ்விதின் நீக்க லாவது, இதற்கு இதுவே பொருள் எனயாவரும் நேரிதின் ஏற்றுக் கொள்ளும்படி ஐயத்தினையும் மயக்கத்தினையும் அறவே களை தல், தெற்றென - தெளிவாக ஒருபொருள் ஒற்றுமை கொளுவு தலாவது, இதுவும் பொருந்தும் அதுவும் பொருந்தும் எனக் கவர்படச் சொல்லாமல், இதற்கு இதுவே பொருள் எனப்பொரு ளொற்றுமை காட்டித் துணிந்துரைத்தல். (கoசு) கoன. சொல்லப் பட்டன எல்லா மாண்பும் மறுதலை யாயின் மற்றது சிதைவே. இளம்பூரணம் : (இ-ன்) மேலவற்றிற் கோதலான நூற்குரியதோர் மரபு முதனுாலாயிற் சிதைவில்லை யென்றவாறு, என்னை ஆவன கூறியது விரியகலாதன சிதைலது வழி நூலென்றவாறாம். பேராசிரியம் : இது, வழி நூற்கே ஆவதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ ள்) மேற்கூறிய சூத்திரமுங் காண்டிகையும், உரையு மென்னும் மூன்றற்குஞ் சொல்லப்பட்ட இலக்கணமெல்லாஞ் சிதையாது மாட்சிமைப்படினும், முதனூலோடு மாறு கொள்ளின் அவற்றான் எல்லாஞ் சிதைந்ததெனவே படும் அந்நூல் எ-று. மறுதலையாயினு மென்ற உம்மை எதிர துதழிஇயிற்று: மேற்கூறும் பத்துவகைக் குற்றமுமே (653) யன்றி வழிநூற்கு