பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் #81 சிதைவிலவென்பது அறிவானே உணர்வலெனின், எடுத்தோத்துக் களைந்து உய்த்துணர்தல் பயமின்றென்பது. அல்லது உம் முதனுாற்கு முன்னையதோர் நூலினை இலக்கியமாகப் பெறி னன்றே முதல்வன்றான் நூலிலக்கணஞ் செய்வது. மற்று அன்னதோர் நூலின் அவன் செய்யாத நூலிலக்கணம் யான் செய்தேனெனவும் அவற்றுச் சிதைவினையே முதனுாற்கண் இல்லையென்றது.உம், ஒழிந்த நான்கும் முதல்வனுாற்கண்ணே உளவாகவின் அவற்றை இலக்கணங் கூறினான் எனவும், இனிக் குற்றங்களும் பிற்றோன்றுங்கொலென்று அஞ்சி இங்ங்னம் அவற்றை வரையறுத்து யான் பாதுகாக்கின்றேனெனவும், அங்ங்னம் பாதுகாத்து இவ்விலக்கணங்கள் ஒகிற்றும் அவன் முதனுாலே இலக்கியமாகப் பெற்றனவுங் கூறியது கூறல் (563) போல்வன வேறோர் பொருள் விளக்குமாயிற் குற்றமன்றென்ப தனையும் யானே கூறியதன்றி முதல்வனாயிற் சில்வகையெழுத் தின் செய்யுட்டாகவே அவற்றை வேறுவேறு விதித்துப் பரந்து படச் செய்யுமெனவும், இவையெல்லாம் அறிவித்தற்குச், " சிதைவில வென்ப முதல்வன் கண்” (661) என்றானென்பது. மற்று, முதல்வன்யாப்பே கூறுமாயின் அந்நூற்குத் தந்திர வுத்தியும் வேண்டுவதென்றாம் பிறவெனின் அங்ங்னமே, முதனுாற் காயின் முப்பத்திருவகையுத்தி வாராது சிறுபான்மையான் வரு மென்றற்கன்றே, ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணர்ந்தது’ (653) என ஈண்டு விலக்கப்பட்ட குற்றத்தின் பின்னர் அவ்வுத்தியை வைத்த கருத்தென்பது ஆண்டுங் கூறுவாமாயிற்றென்பது. மற்று, முதனூலினால் நூல் இலக்கணங் கூறானோவெனின், கூறினானே யன்றோ? தான் ஒருவகையான் நூல்செய்து மற்று அதுவே நூலிலக்கணமெனப் பிற்காலத்தார்க்கு அறியவைத் தமையினென்பது. மற்றுச் சிதைவிலவென்பார் யாரோவெனின் நிகழ்காலத்தாசிரியரும் எதிர்காலத்தாசிரியருமென உணர்க. 1. முதனுாலாசிரியன், தான் நூல் செய்து அந்நூலின் அமைப்பே நூலின் இலக்கணம் எனப் பிற்காலத்தார்க்கு அறிய வைத் தானாகலின் அவனும் நூலின் இலக்கணம் கூறினானெனவே கொள்ளப்படும்.