பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 露5 & 5 விழியாக் குருளை மென்முலை சுவைப்பக் குழிவயிற் றுஞ்சுங் குறுந்தாட் பன்றி" எனவும், இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை' * (குறுந் : 47) எனவும், ' குருளை கோட்பட லஞ்சிக் குறுமுயல் வலையிற் றப்பாது மன்னுயி ரமைப்ப’’ எனவும் வரும். ஆயுங்காலை யென்றதனால், - * சிறுவெள் ளரவி னல்வரிக் குருளை’ (குறுந் : 119) என்பதுங் கொள்க. ஆய்வுரை : (இ-ள்) நாய், பன்றி, புலி, முயல் என்னும் நான்கும் ஆராயுங்காலத்துக் குருளையென்னும் இளமைப் பெயரால் வழங்குதற்கு உரியன என்பர் ஆசிரியர் எ-று. 'ஆயுங்காலை என்றதனால் ஊர்வனவாகிய பாம்புக்கும் 'குருளை என்னும் இளமைப்பெயர் வழங்குதல் கொள்வர் பேராசிரியர். (அ) க. நரியும் அற்றே நாடினர் கொளினே இளம்பூரணம் : (இ-ள்) என்றது, நரியின் இளமைப்பெயரும் ஆராயுங் காலத்துக் குருளை எனப்படும் என்றவாறு. இது மேலனவற்றோடு ஒரு நிகரனவாக ஒதாமையிற் சிறு பான்மை வருமென்று கொள்க. பேராசிரியம் : (இ - ள்.) நரியுங் குருளை யெனப்படும் (எ - று). 1. ஆளி நன்மாண் அணங்குடைக்குருளை (பொருந 139) 'நாயே.பன்றி (தொல்-மரபியல்-அ) என்னுஞ் சூத்திரத்து ஆயுங்காலை' என்றதனான் முடித்தாம்’ என்பர் நச்சினார்க் கினியர்.